Cinema NewsKollywood

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் ரிலீஸானது

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் இன்று படக்குழு வெளியிட்டது இது சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் ரிலீஸானது
Silambaran STR

நடிகர் சிம்பு கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தார்.

அப்படத்தில் அவருடன் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதிராவ் ஆயாத்ரி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

அதன் பிறகு சிம்பு நடிப்பில் வந்த ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெளியானது. இப்படத்தை இயக்குனர் சுந்தர். சி. இயக்கினார் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதனால் இது சிம்பு ரசிகர்களை பெருத்த ஏமாற்றம் அடைய செய்தது..

இதற்க்கு பிறகு நடிகர் சிம்புவின் திரைபடங்கள் எதுவும் வெளிவராமல் இருந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் வருத்த முற்று இருந்தனர்.

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. அப்படத்தை தொடங்குவதற்காக தொடர்ந்து சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது படக்குழு.

வெகு நாட்கள் ஆகியும் படத்தின் அப்டேட்கள் எதும் வெளியாகத நிலையில் சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்தின் அப்டேட்டை கேட்டு சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

பின்னர் ஒருவழியாக மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஓகே சொன்னதை அடுத்து அப்படத்தின் படக்குழு சூட்டிங் பணிகளை துவங்கியது.

அதை உறுதி செய்யும் விதமாக நடிகர் சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும் புகைபடத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் அதனை அவருடைய ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கி வந்தனர்.

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் ரிலீஸானது

இதற்க்கு நடுவே சிம்பு ஒரு படத்தில் நடித்து முடித்து இருந்தார் அது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படம். சமீபத்தில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர் இது சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது..

வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்புவை திரையில் காண போகும் உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தின் டீசரை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குனர் சுசீந்திரன் சிம்புவிடம் கதை ஒன்றை சொல்ல அதற்கு சிம்புவும் உடனே ஓகே சொல்ல

படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றது. ஒரு மாத கால இடைவெளியில் படத்தை எடுத்து முடித்து அதன் டீசரையும் வெளியிட்டது படக்குழு..

அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் முதல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

அதற்கு ஏற்றார் போல் இன்று ‘தமிழன் பாட்டு’ என்ற தலைப்பு கொண்ட லிரிக்கள் வீடியோவை வெளியிட்டனர் படக்குழு..

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார் தமிழன் பாட்டு பாடலை யுகபாரதி எழுத்தியுள்ளார். பாடகர்கள் அனந்து, தீபக் மற்றும் தமன் ஆகியோர் பாடியுள்ளனர்.

சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் பாடல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் TamizhanPattu எனும் ஹஸ்டாக் உருவாக்கி இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !