ஜகமேதந்திரம் புதிய அறிவிப்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

ஜகமேதந்திரம் புதிய அறிவிப்பு ரசிகர்கள் மகழிச்சி அடைய செய்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம்.

இத்திரைபடம் அவருக்கு 40-வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்க்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது.

வெகு நாட்களில் இப்படத்தின் அப்டேட்களுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த பஸ்ட் லுக் போஸ்டர் கொண்டாட்டத்துக்கு வித்திட்டது.

எனவே ஜகமே தந்திரம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷின் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றது.

இப்படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருப்பதனால் ரசிகர்களுடையே எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுயிருக்கிறது. இதற்க்கு முன் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுபேட்டை திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது.

ஜகமேதந்திரம் புதிய அறிவிப்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

இதை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை மோஷன் போஸ்டராகவே வெளியிட்டது படக்குழு அதில் தனுஷ் அதிரடியான என்ட்ரி கொடுப்பது போல் காட்சி அமைந்திருந்தது.

அந்த போஸ்டரில். வெள்ளை சட்டைமற்றும் வேட்டி அணிந்து இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி கொண்டு அதிரடியாக என்ட்ரி கொடுத்து நுழைவது போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டு இருந்தது.

இது தனுஷின் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது பிறகு பலராலும் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இதற்கு முன் முதன் முறையாக ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார் அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது கார்த்திக் சுப்புராஜ்க்கு.

அப்படமும் ஒரு கேங்க்ஸ்டர் படமாக அமைந்திருந்தது படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் அதில் அமைந்த பாடல்களும் பெரிய ஹிட் அடித்தது ரஜினி இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வெளிவந்து மிக பெரிய வெற்றியை படைத்தது.

குறிப்பாக அசுரன் படத்தில் தனுஷ் நடித்த அப்பா கதாபத்திரத்தில் அவருக்கு அணைத்து தரப்பு ரசிகர்களாலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பின் முதன் முறையாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

மேலும் ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார் ஜகமே தந்திரம் படத்தின் ராக்கிட ராக்கிட எனும் முதல் பாடல் நாளை வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.

ஜகமே தந்திரம் புதிய அறிவிப்பு தனுஷ் பிறந்த நாளுக்காக படக்குழு பாடலை வெளியிடுகின்றனர் இதை ரசிகர்கள் இணையத்தில் jagameyThanthiram என்ற ஹஸ்டாக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்

இதை தொடர்ந்து பாடலின் போஸ்டரில் தனுஷ் வெள்ளை வேட்டி சட்டையுடன் நடனமாடுவது போன்ற காட்சி அமைந்த போஸ்டரை வெளியிட்டு இருந்தார் கார்த்திக் சுப்புராஜ் மேலும் அதில் பஸ்ட் சிங்கள் எனவும் குறிபிட்டுள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜகமே தந்திரம் படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் படத்தில் தனுஷ் , ஐஸ்வர்யா லெட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜமேஸ் காஸ்மோ, கலையரசன், வடிவுக்கரசி போன்ற பலர் நடிக்கின்றனர்.

Exit mobile version