Cinema NewsKollywood

தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இது தான்

தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் மோஷன் போஸ்டர் இன்று அதிகாரபூர்வமாக வெளியானது..

தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இது தான்
Dhanush

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜியன், லால், யோகிபாபு, லக்ஷ்மி ப்ரியா சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

கொரோனா பெருந்தொற்று இருக்கும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் திரை அரங்குகள் கட்டுபாடுகளுடன் கூடிய விதிமுறைகளுடன் திறக்கபட்டாலும் படத்தினை திரையில் காண மக்கள் கூட்டம் திரைக்கு வருமா? என்ற சந்தேகம் நிலவி வந்த வேலையில் கர்ணன் திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றிருப்பது இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிக முக்கிய திரைபடமாக கர்ணன் கருதபடுகிறது..

கர்ணன் திரைபடத்திற்க்கு பிறகு நடிகர் தனுஷ் அந்த்ராங்கி ரே, தி க்ரே மேன், மாறன், சன் பிக்சர் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து திரைபடங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இவற்றில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும்,

இயக்குனர் வெற்றி மாறனுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் போகும் திரைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாரா அலி கான், அக்ஷய் குமார், நிம்ராட் கவுர் உள்ளிட்டோர் நடித்த அந்த்ராங்கி ரே திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இது தான்

இதை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் மாற்றும்மொரு படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியானது. Sithara Entertainments தயாரிப்பில் Fortune Four Cinemas உடன் இணைந்து நடிக்கும் திரைபடத்திற்க்கு ( Vaathi ) வாத்தி என பெயரிடப்பட்டுள்ளது.

.நடிகர் தனுஷ் மற்றும் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கும் இப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார் படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !