Cinema NewsKollywood
Trending

மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் திருமணம் வைரலாகும் புகைப்படம்

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று எளிய முறையில் நடைபெற்றது..

manjima mohan gautham karthik
gautham karthik & manjima mohan

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கௌதம் கார்த்திக் கடந்த 2013-இல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைபடத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்..

கடல் படத்தை தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது கௌதம் கார்த்திக் சிம்புவுடன் பத்து தல, 16 ஆகஸ்ட் 1947 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்..

இந்நிலையில், கௌதம் கார்திக்கிற்க்கும் தேவராட்டம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இன்று எளியமையான முறையில் காதல் திருமணம் நடைபெற்றது..

தேவராட்டம் படத்திற்க்கு கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன..

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலிக்கிறார்களா ? அல்லது நண்பர்களா ? என ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதனை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தனி தனியே பதிவிட்டு நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்..

இதை தொடர்ந்து, தற்போது கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஆகியோரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்புவிடுக்கப்பட்டு எளிமையான முறையில் திருமணம் நடந்தது..

இதையடுத்து, திருமண உடையில் இருக்கும் தங்களது புகைபடத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் புது தம்பதிகளான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்..

புதுமண தம்பதிகளான கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடிக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !