Cinema NewsKollywood

‘விருமன்’ திரைப்படம் குறித்து வெளியான சூப்பரான தகவல்

‘விருமன்’ திரைப்படம் குறித்து வெளியான சூப்பரான தகவல் இன்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்..

'விருமன்' திரைப்படம் குறித்து வெளியான சூப்பரான தகவல்
Viruman Team

நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் விருமன். இதற்க்கு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளார். இத்திரைபடம் கடந்த செப்டெம்பர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது

அதில் இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாலா, நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

‘விருமன்’ திரைப்படம் குறித்து வெளியான சூப்பரான தகவல்

இத்திரைபடத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமான் திரைபடத்தின் மூலம் முதன் முறையாக கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி உள்ளிட்ட பலர் இத்திரைபடத்தில் நடித்து உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கபட்டது இதில் நடிகர் கார்த்தி விருமன் படத்திற்காக டப்பிங் பணிகள் மேற்கொள்ளும் புகைபடங்கள் வெளியாகி வைரலாக பரவி வந்தன.

தமிழகத்தில் மதுரை, தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இத்திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் நடைபெற்று படமாக்கபட்டுள்ளன.

விருமன் திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21 வரை நடைபெற்றுள்ளது.

மொத்தம் 60 நாட்களில் இப்படத்தின் படபிடிப்பு பணிகளை மிக வேகமாக செய்து முடித்துள்ளது விருமன் படக்குழுவினர்.

இத்திரைபடம் ஏற்கனவே 2022 சம்மருக்கு திரைக்கு வரும் என அறிவித்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக படத்தின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்து உள்ளது.

மேலும், விருமன் படத்தை தயாரிக்கும் 2D Entertainment நிறுவனம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருவதாகவும் வரும் 2022 சம்மருக்கு விருமன் திரைக்கு வர உள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இது குறித்து நடிகர் சூர்யா நன்றி ஹீரோ சார்… முத்தையா மற்றும் விருமன் படக்குழுவினர் .படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !