தல கோதும் ஜெய் பீம் படத்தின் புதிய பாடல்
Last Updated on October 25, 2021 by Dinesh
தல கோதும் ஜெய் பீம் படத்தின் புதிய பாடல் இன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது…

கடந்த வருடம் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரறை போற்று வெற்றி திரைபடத்திற்க்கு பிறகு சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் ஜெய் பீம்.
இத்திரைபடத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் தொடங்கபட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் படத்தின் படபிடிப்பு பணிகள் அவ்வ போது தடைபட்டது.
இருப்பினும் ஜெய் பீம் திரைபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடபட்டது.
ஜெய் பீம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பெரிதாக எதிர்ப்பார்க்கபடுகிறது.
ஜெய் பீம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இணையத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜெய் பீம் படத்தின் இரண்டாவது பாடல் தல கோதும் என்ற பாடல் இணையத்தில் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இப்படத்தின் முதல் பாடல் பவர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இரண்டாவது பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து ,மொழிகளில் உருவாகி என்பது குறிப்பிடதக்கது. வெறித்தனமான வரிகளுடன் வா சாமி பாடல்
இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில் தற்போது வெளியாகி இருக்கும் பாடலை பாடலாசிரியர் ராஜு முருகன் எழுதியுள்ளார். இப்பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்.
ஜெய் பீம் திரைபடத்தை டி ஜே ஞானவேல் இயக்குகிறார் படத்தில் சூர்யா உடன் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்பாடல் கீழே கொடுக்கபட்டுள்ளது பாடலை கேட்டு மகிழுளுங்கள்.