எதற்க்கும் துணிந்தவன் படத்தின் மாஸ் அப்டேட்
Last Updated on December 26, 2021 by Dinesh
எதற்க்கும் துணிந்தவன் படத்தின் மாஸ் அப்டேட் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது…

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளி வந்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைபடங்களின் வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் எதற்க்கும் துணிந்தவன்..
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், சத்ய ராஜ், ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கபட்ட இப்படத்தின் படபிடிப்பு பணிகள் சென்னை, காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கும்,
வேலையில் தான் ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக படபிடிப்பு பணிகள் படக்குழுவினர் நலன் கருதி கைவிடபட்டது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பின்னர் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் பின்னர், படத்தின் படபிடிப்பு பணிகள் மீண்டும் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
அதை தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எதிரபார்த்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
எதற்க்கும் துணிந்தவன் படத்தின் மாஸ் அப்டேட்
இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதல் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் நிலவி வந்தது. இதனிடையே படத்தின் முதல் பாடல் (vaada thambi ) வாடா தம்பி என்ற லிரிகள் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ET படத்தின் இரண்டாவது பாடல் ககுறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது.
பாடாலரிசிரியர் யுகபாரதி எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர்கள் பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாசன், பிரிந்தா மணிக்கவாசகன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்..
தற்போது மிகவும் எதிர்ப்பார்ப்பை பெற்ற ET படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 6.00 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ETSecondSingle என்ற ஹஸ்டாக்கை பயன்படுத்தி இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.