வீரமே வாகை சூடும் படத்தின் பரபரப்பான டீசர்

வீரமே வாகை சூடும் படத்தின் பரபரப்பான சண்டை காட்சிகளிடன் டீசர் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

வீரமே வாகை சூடும் படத்தின் பரப்பான டீசர்
Vishal

நடிகர் விஷாலின் 31 வது படமான வீரமே வாகை சூடும் திரைபடத்தை இயக்குனர் து.பா. சரவணன் இயக்கி வருகிறார்.

இவர் இதற்க்கு முன் குறும் படங்களை இயக்கி வந்துள்ளார் தற்போது இத்திரைபடத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கி உள்ளார்.

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த எனிமி திரைபடம் வரவேற்பை பெற்றதை அடுத்து விஷால் நடிப்பில் தற்போது வெளிவருகிறது வீரமே வாகை சூடும் திரைப்படம்.

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடிகர் விஷால் வெளியிட்டு இருந்தார். அந்த பஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் வில்லன்களை அடித்து விட்டு கையில் ஒரு கட்டையுடன் போஸ் கொடுக்கும் புகைபடத்தினை பஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர்.

படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் பார்க்கும் போதே இந்த திரைப்படம் மெரட்டலான ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளதை உணர்த்துகிறது.

இந்த திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் ஹைத்ராபாத்தில் ஒரே கட்டமாக எடுத்து முடித்து அசத்தி உள்ளனர் படத்தின் படக்குழுவினர்.

நடிகர் விஷால் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு, பாபு ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் எடிட்டராக என்.பி. ஸ்ரீகாந்த் பணியாற்றியுள்ளார்.

வீரமே வாகை சூடும் படத்தின் பரப்பான டீசர்

கடந்த டிசம்பர் 23 ஆம் தேதியே படத்தின் டீசர் டிசம்பர் 25 ஆம் தேதி மாலை வெளியிடபடும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.

அதன் படி, இன்று கிறிஸ்த்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது..இணையத்தை கலக்கும் அருண்விஜயின் யாணை

இந்த படத்தின் டீசரில் ‘இங்க மனிதர்கள் ரெண்டே வகை தான்’ என்ற வசனங்களில் தொடங்கி அப்ப நீ சண்டைய நிறுத்த போறது இல்ல என்ற கேள்விக்கு

அதை என் எதிரி தான் முடிவு பண்ணனும் என்ற வசனங்களுடன் ஒரு அதிரடியான சண்டை காட்சிகளுடன் டீசர் வெளியாகி உள்ளது.

இத்திரைபடம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்…

கீழே படத்தின் டீசர் கொடுக்கபட்டுள்ளது…

Exit mobile version