valimai : நா கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி

valimai : நா கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி என்ற தெறி வசனங்களுடன் வெளியானது வலிமை முன்னோட்டம்…

valimai : நா கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி
valimai glimpse

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை.

இதற்க்கு முன் தல அஜீத் எச். வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தில் அஜீத் குமார் உடன் ஸ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடேசnன், ஆண்டிரியா டரியங்க் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்..

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த பிங்க் திரைபடத்தின் தமிழ் ரீமேக் தான் நேர் கொண்ட பார்வை.

இப்படம் ஹிந்தியில் பிங்க் திரைப்படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

தமிழிலும் நேர் கொண்ட பார்வை அஜீத் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.. இப்படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைதிருந்தார்

நேர் கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத்துடன் இணைந்து தல அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைபடம் கடந்த 2019 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் உருவாவதாக அறிவிப்புகள் வெளிவந்தன. இந்த அறிவிப்பானது அஜீத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஏனெனில் நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜீத்துடன் தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் எச்.வினோத் ஆகியோரது கூட்டணி மீண்டும் இணைந்ததில் தல60 படத்தின் மீதமான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு சற்று அதிகமானது.

கடந்த 2019 ஆம் ஆண்டு thala60 என்ற தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத் சுற்றியுள்ள பகுதிகளில் படபிடிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.

இதனிடையே கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்தன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டு படபிடிப்புகள் மற்றும் வணிகவளாகங்கள் என அனைத்திற்க்கும் தமிழக அரசு தடை விதித்து முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது.

ஊரடங்கு அமலில் இருந்ததனால் வலிமை படத்தின் படபிடிப்பு பணிகள் பாதியிலே கைவிடபட்டது. பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும்

தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்தது. அதன் பின் வலிமை படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் அஜீத் ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தள பக்கங்களில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து படத்திஉன் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் படக்குழுவினர்களுக்கு தொடர்ந்து அப்டேட்களை கேட்டு கொண்டு இருந்ததனால்

படக்குழுவினர் அஜீத் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக வலிமை படத்தின் பஸ்ட் சிங்கிள் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அஜீத் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தனர்.

valimai : நா கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி

இதை தொடர்ந்து சமீபத்தில் வலிமை திரைப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்களுக்கு திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்..

மேலும், வலிமை படத்தின் சிறிய முன்னோட்டம் இன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இன்று 6 மணிக்கு வலிமை படத்தின் (valimaiglimpse) முன்னோட்டம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் சரியாக 6.30 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் valimaiglimpse வீடியோவை வெளியிட்டார்.

valimaiglimpse சிறிது நேரத்தில் அஜீத் ரசிகர்கள் ட்விட்டரில் valimaiupdate தற்போது கொண்டாடி வருகின்றனர்.

valimaiglimpse

Exit mobile version