Cinema NewsKollywood

valimai Trailer : மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஏகே

valimai Trailer : மாஸ் எண்ட்ரி கொடுக்கும் அஜீத் குமார் நடித்த வலிமை படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

valimai Trailer : மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஏகே
AK

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜீத் குமார் நடிப்பில் வெளிவந்த நேர் கொண்ட் பார்வை திரைபடத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் எச். வினோத் வலிமை படத்தினை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் நடிகர் அஜீத் குமார் இரண்டாவது முறையாக இயக்குனர் எச். வினோத்துடன் இணைந்து வலிமை படித்தில் நடித்துள்ளார்.

இத்திரைபடம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணபட்டது.

நேர் கொண்ட பார்வை படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார். தற்போது இயக்குனர் எச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜீத் குமார் ஆகியோரது கூட்டணி வலிமை படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

இந்த வெற்றி கூட்டணியுடன் இரண்டாவது முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது..

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கபட்ட வலிமை படத்தின் படபிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த வேலையில்,

2020 மார்ச் மாதம் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டது.

இதன் காரணமாக படத்தின் படபிடிப்பு பணிகளும் பாதியில் கைவிடபட்டது. இதை தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர் படபிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் தளர்வுகளை கொண்டு வந்தது தமிழக அரசு..

இதனை தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட்களை படக்குழுவினரிடம் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர். நாம் சமூக வலைதளத்திற்க்குல் சென்றாள்,

அங்கு வலிமை அப்டேட் என்ற சொல்லை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்க்கு இணையத்தில் வலிமை அப்டேட் ட்ரெண்ட் செய்யபட்டு வந்தது.

அதன் பின், வலிமை படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவைகள் படகுவினரால் வெளியிடபட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து வலிமை படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாடல்களும் வெளியாகி இன்று வரை ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறது.

வலிமை படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மட்டுமின்றி படக்குழுவினர் அஜீத் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டது.

அதில் நடிகர் அஜீத் குமார் பைக் சேஸிங் காட்சியில் கீழே விழுந்த அடுத்த சில வினாடியே எழுந்து மீண்டும் பைக் சேஸ் சீனில் கலக்கி இருப்பது ரசிகர்களுக்கு உருசாகத்தை மூட்டியதாக அமைந்து இருந்தது.

valimai Trailer : மாஸ் எண்ட்ரி கொடுக்கும் ஏகே

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியானதை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் அஜீத் குமாரின் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

வலிமை திரைப்படம் வரும் 2022 பொங்கல் அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

3 நிமிடங்கள் அடங்கிய வலிமை படத்தின் டிரைலர் கீழே கொடுக்கபட்டுள்ளது…

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !