Cinema NewsKollywood

Amala Paul : காதலர் ஜகத் தேசாய்யை இரண்டாவது திருமணம் செய்தார்

அமலா பால் திடீர் திருமணம்

Amala Paul : காதலர் ஜகத் தேசாய்யை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது..

amala paul movies

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவரான

நடிகை அமலா பால் காதலர் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்..

இது குறித்து நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களை ஒருங்கிணைத்த அன்பையும்,

அருளையும் கொண்டாடுகிறோம். என் தெய்வீக ஆண்மையுடன் திருமணம் செய்து கொண்டேன்.

amala paul new movie

உங்கள் அன்பையும் ஆசிகளை தேடுகிறேன்.. பரிசுத்தம் என பதிவிட்டுள்ளார்..

இதனை தொடர்ந்து அமலா பால், ஜகத் தேசாய் ஆகிய புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கு மைனா திரைப்படம் தமிழில் மிகவும் பிரபலமடைய செய்தது..

மைனா திரைபடத்திற்க்கு பிறகு அமலா பால் நடித்த திரைபடங்கள் தலைவா, தெய்வ திருமகள்,

ஆடை, ராட்சசன், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது..

இதில் தெய்வ திருமகள் படத்தில் நடிக்கும் பொழுது அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பால் காதலிக்க தொடங்கினார்கள்..

இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் காதல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இயக்குனர் விஜய் தளபதி விஜய்யை வைத்து தலைவா திரைபடத்தை இயக்கினார்

இப்படத்தில் நடிகை அமலா பால் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்..

அதன் பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் அமலா பால் திருமணம் நடைபெற்று முடிந்தது.

ஆனால், சிறிது காலத்திலே விஜய் மற்றும் அமலா பாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மனபூர்வமாக விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தனர்..

விவகாரத்துக்கு பிறகு அமலா பால் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வேலையில்லா பட்டதாரி 2, ஆடை, கடாவர், திருட்டு பயலே 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்..

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அமலா பால் அடிக்கடி சுற்றுலா பயணம் செய்து

அங்கு வித விதமான போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்..

Amala Paul காதல் திருமணம்

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு ( 26-10-2023 ) முன்பு அமலா பால் இன்ஸ்டாகிராம்

பக்கத்தில் தனது பிறந்த நாளன்று ஜகத் தேசாய் அமலா பாலிடம் காதலை வெளிபடுத்தும் வீடியோவை வெளியிட்டார்..

அந்த வீடியோவில் அமலா பால் ஜகத் தேசாய்க்கு முத்தம் கொடுத்து காதலை ஏற்றும் கொள்கிறார்.

இருவரும் தங்கள் காதலை வெளிபடுத்திய 10 நாட்களிலே திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது..

கேரளாவில் மிக எளிதாக அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் ஆகிய இரு வீட்டார் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது..

தற்போது அமலா பால் திருமண புகைபடங்கள் இணையத்தில் பரவி பலரது வாழ்த்துகளை பெற்று வருகிறது..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !