Cinema NewsKollywood

ஜாலியோ ஜிம்கானா பீஸ்ட் இரண்டாவது பாடல்

ஜாலியோ ஜிம்கானா பீஸ்ட் இரண்டாவது பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் தற்போது அந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது..

ஜாலியோ ஜிம்கானா பீஸ்ட் இரண்டாவது பாடல்
Beast

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைபடத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைபடம் வரும் (2022) ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கபடுகிறது..

பீஸ்ட் படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது போஸ்டர்கள் கடந்தாண்டு ஜூன் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் பீஸ்ட் படத்தின் முதல், இரண்டாவது போஸ்டர்கள் வெளியாகி ரசியக்ர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கபட்டது. அந்த அறிவிப்பில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அதனை இணையத்தில் கொண்டாடி வந்தனர்.

இதையடுத்து பீஸ்ட் படத்தின் பாடல் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு படக்குழு பீஸ்ட் படத்தின் முதல் பாடலாக ஹலமித்தி ஹபிபோ என்ற (arabic kuthu song ) பாடலை வெளியிட்டது..

அரபிக் குத்து பாடலை இணையத்தில் தற்போது வரை 182 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதன் வரிசையில் தற்போது பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்‌ அறிவித்துள்ளது..

சன் பிக்சர்ஸ்‌ நிறுவனம் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இன்று மாலை 7.00 பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட்டா அல்லது இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டா என்று இணையத்தில் விவாதித்து வந்த வேலையில் சரியாக 7.00 மணிக்கு சன் பிக்சர்ஸ்‌ அறிவித்த அந்த அறிவிப்பு வெளியானது.

அப்படி வெளியான அறிவிப்பில் 30 வினாடிகள் அடங்கிய Beast படத்தின் இரண்டாவது பாடலின் ப்ரோமோ வெளியிடபட்டது. அந்த ப்ரோமோவில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார்,

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ஆகியோர் பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் அடங்கிய கலக்கலான பிரோமோவாக வெளியானது..

ஜாலியோ ஜிம்கானா பீஸ்ட் இரண்டாவது பாடலை கு. கார்த்திக் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்….

JollyOGymKhana (beast second single promo ) பாடலின் ப்ரோமோ இதனுடன் இணைக்கபட்டுள்ளது கண்டு மகிழுங்கள்..

JollyOGymkhana

Arabic kuthu ( beast first song ) பீஸ்ட் படத்தின் முதல் பாடல் கீழே கொடுக்கபட்டுள்ளது..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !