Cinema NewsKollywood

பரத் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியானது

பரத் வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..

பரத் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியானது
bharath & vani bhojan

தமிழில் பாய்ஸ், காதல், எம் மகன், சேவல், வெயில், கூடல் நகரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் பரத் தற்போது இயக்குனர் எம். சக்திவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்..

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்க்கு மிரள் ( Miral ) என பெயரிடபட்டுள்ளது. மேலும் மிரள் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை அதிகாரபூர்வமாக வெளியானது..

மிரள் மோஷன் போஸ்டர் ஆரம்பத்தில் கெவின் என்ற அலறல் சத்தத்துடன் காற்றாழைகள் சுற்றும் பகுதியை காண்பித்துள்ளனர். சுழலும் காற்றாழைகளுக்கு அருகில் தீபிடித்து எரியும் இடத்திற்க்கு அருகாமையில் கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது..

இந்த காட்சிகளுடன் மிரள வைக்கும் பி‌ஜி‌எம் என மோஷன் போஸ்டரிலே மிரட்டியுள்ளனர் மிரள் படக்குழுவினர். இதற்க்கு தமிழில் வெளியான oh my கடவுளே, மரகத நாணயம், ராட்சசன், bachelor உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த Axess Film Factory நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது..

இயக்குனர் எம். சக்திவேல் இயக்கும் இப்படத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

மிரள் படத்திற்க்கு இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் எடிட்டராக கலைவாணன் ஆர், ஒளிப்பதிவாளராக சுரேஷ் பல ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

Miral படத்தின் பஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளபக்கத்தில் இன்று மாலை 5.00 மணி அளவில் வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மிரள் படத்தின் மோஷன் போஸ்டர் கீழே இணைக்கபட்டுள்ளது கண்டு ரசியுங்கள்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !