தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி திடீர் பிரிவு அறிவிப்பு

தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி திடீர் பிரிவு அறிவிப்பால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி திடீர் பிரிவு அறிவிப்பு
Dhanush & Aiswarya Dhanush

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் சமீபத்தில் தன் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்ற அசுரன் திரைபடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்..

அசுரன் திரைபடத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் ஆர். எஸ். துறை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் (2020), இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ( 2021),

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் ஆகிய திரைபடங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..

இதில் குறிப்பாக, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், துஷாரா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில்,

கடந்த வருடம் வெளிவந்த கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிபிடத்தக்கது..

இதனை தொடர்ந்து, பாலிவுட்டில் நடிகர் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் உடன் இணைந்து நடித்த ‘அந்த்ராங்கி ரே’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.

அந்த்ராங்கி ரே திரைப்படம் தமிழில் மொழி மாற்று செய்யபட்டு கல்யாண கலாட்டா என்ற தலைப்புடன் இத்திரைபடம் தமிழிலும் வெளியாகியது.

இத்திரைபடங்களை அடுத்து தற்போது நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் மாறன், நானே வருவேன், வாத்தி மற்றும் சன் பிக்சர்ஸ்‌ தயாரிக்கும் திருசிற்றம்பலம் ஆகிய திரைபடங்கள் தன் கை வசம் வைத்துள்ளார்..

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்..

அந்த அறிவிப்பில் தெரிவித்து இருப்பது பின்வருமாறு :

.நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள், நலம் விரும்பிகள் என 18 வருடங்கள் ஒற்றுமையாக இருந்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து சென்றது.

இன்று இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்கும் இடத்தில் உள்ளதாகவும், ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளதாகவும்,

தங்களின் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்குகள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதே போன்ற அறிவிப்பை ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிருந்து உள்ளார். தனுஷ் (Dhanush) மற்றும் ஐஸ்வர்யா (aishwarya dhanush ) ஆகிய இருவரின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி திடீர் பிரிவு அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர்க்கு சமூக வலைதளங்கள் மூலம் இருவருக்கும் தங்களின் ஆறுதல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version