Cinema NewsKollywood

இயக்குனர் ஹரியின் யாணை படத்தின் அப்டேட்

இயக்குனர் ஹரியின் யாணை படத்தின் சூப்பரான அப்டேட் இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்…

இயக்குனர் ஹரியின் யாணை படத்தின் அப்டேட்
arun vijay & priya bhavani shankar

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி இப்பொழுது தனது நெருங்கிய உறவினரான நடிகர் அருண் விஜய்யை வைத்து ‘யாணை’ திரைபடத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் மூலம் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் முதன் முறையாக இணைகின்றனர்.

( director hari upcoming movie ) இந்த ஆண்டு 2021 ஜூன் மாதம் தொடங்கபட்ட யாணை படத்தின் படபிடிப்பு மூன்று கட்ட படபிடிப்புகளாக நடந்து முடிந்துள்ளது.

கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கபட்ட படத்தின் மூன்றாம் கட்ட படபிடிப்பினை காரைக்குடியில் நிறைவு செய்துள்ளது யாணை படத்தின் படக்குழு.

இப்படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் செப்டெம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் படக்குழுவினரால் வெளியிடபட்டது.

பஸ்ட் லூக் போஸ்டரில் நடிகர் அருண் விஜய் முறுக்கு மீசையுடன் கையில் அரிவாளை ஊன்றியபடி தோற்றமழிக்கும் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இதை தொடர்ந்து அருண் விஜய்யின் யாணை படத்தின் போஸ்டர்கள் மற்றும் படபிடிப்பு தல புகைபடங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

யாணை திரைப்படம் நடிகர் அருண் விஜய் நடிக்கும் 33 வது படம். இதில் (arun vijay yaanai movie cast ) நடிகர் அருண் விஜய்யிக்கு ஜோடியாக முதன் முறையாக நடிகை ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கிறார்.

இயக்குனர் ஹரியின் யாணை படத்தின் அப்டேட்

ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன் (drumsticks production ) தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் யாணை படத்திற்க்கு இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில்( yaanai cast ) நடிகர் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சமுத்திரகணி, அம்மு அபிராமி, நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து யாணை படத்தின் கதாநாயகி நடிகை ப்ரியா பவானி சங்கர் தனது டப்பிங் பணியை முடித்துவிட்டு

ஒட்டு மொத்த டீமையும் ஒரு இனிமையான அனுபவமாக மாற்றியதற்க்கு படக்குழுவினர்க்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் விரைவில் உங்கள் அனைவரையும் திரை அரங்குகளில் சந்திப்போம் என்று நம்புகிறோம் என படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய்,

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோரை டேக் செய்து ட்வீட் செய்து இருந்தார். மேலும் தான் டப்பிங் செய்யும் புகைபடத்தையும் அதனுடன் வெளியீட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது .நடிகர் அருண் விஜய் முறுக்கு மீசையுடன் வாயில் சிகரேட் புகைத்த படியான ஒரு ஸ்பெஷல் போஸ்டர் உடன் யாணை படத்தின் டீசர் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிடபடும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !