விக்ரம் படத்திற்க்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்
Last Updated on May 25, 2022 by Dinesh
விக்ரம் படத்திற்க்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ் படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக வெளியான தகவல் இதோ..

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைபடத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது..
விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கும் இப்படத்திற்க்கு அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்..
மேலும் இந்த படத்தின் எடிட்டராக பிலோமீன் ராஜ், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஆகியோர் படத்தில் பணியாற்றியுள்ளனர். ஏற்கனவே விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் பத்தல பத்தல (pathala pathala ) என்ற பாடல் வெளிவந்து ரசிக்ககளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இந்நிலையில் இன்று (25-05-2022) காலை 11.00 மணியளவில் விக்ரம் படத்திலிருந்து போர்க்கண்ட சிங்கம் என்ற மற்றுமொரு லிரிகள் வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது..
போர்க்கண்ட சிங்கம் பாடல் வெளியாகி 9 மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை யுட்யூப் வலைதளத்தில் கடந்து வருகிறது…
இதை தொடர்ந்து, தற்போது விக்ரம் படத்தின் ஒரு புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விக்ரம் திரைப்படம் தணிக்கை சான்றிதழை பெற தணிக்கை குழுவிற்க்கு அனுப்பபட்டிருந்தது..
தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு படத்திற்க்கு ( Vikram Censored U/A ) சான்றிதழ் கொடுக்கபட்டுள்ளது..
இதனை அதிகாரபூர்வமாக விக்ரம் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்புடன் வரும் ஜூன் 3 ஆம் தேதி விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.