ஜி.வி. பிரகாஷ் குமாரின் சரவெடியான ‘Selfie’

ஜி.வி. பிரகாஷ் குமாரின் சரவெடியான ‘Selfie’ திரைபடத்தின் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது…

ஜி.வி. பிரகாஷ் குமாரின் சரவெடியான 'Selfie'
G.V. Prakash kumar & varsha

இசையமைப்பாளர், நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் செல்ஃபீ திரைபடத்தின் டிரைலர் இன்று மாலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார்.

selfie படத்தின் டிரைலரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு நாளைய தலை முறையின் கடும் உழைப்பினில் உருவாகியுள்ள,

‘selfie’ படத்தின் டிரைலரை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் என செல்ஃபீ படகுழுவிற்க்கு வாழ்த்து தெரிவித்து டிரைலரை வெளியிட்டுள்ளார்.

இத்திரைபடத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், டிஜி. குணாநிதி,

வர்ஷா பொல்லாம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்ரமணியம் சிவா, சாம் பால், வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் சரவெடியான ‘Selfie’

செல்ஃபீ திரைபடத்தினை இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் மதிமாறன் படத்தினை எழுதி, இயக்குகிறார். இத்திரைபடம் இயக்குனர் மதிமாறனுக்கு முதல் திரைப்படம் ஆகும்.

மேலும், இப்படத்தின் கதாநாயகனான ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்க்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளராக விஷ்ணு ரங்கசாமி, எடிட்டராக எஸ். இளையராஜா, கலை இயக்குனராக ஏ.ஆர். மோகன், ஸ்டண்ட் மாஸ்டராக ரம்போ விமல் உள்ளிட்டோர் selfie படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை பாடலாரிசியர் அறிவு மற்றும் ஜெயஸ்ரீ மதிமாறன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

செல்ஃபீ படத்தினை தயாரிப்பாளர் டி.சபரீஷ் தயாரித்துள்ளார் இப்படம் விரைவில் திரை அரங்கிற்க்கு வரவிருக்கிறது.

இதனிடையே இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் எழுதி, இயக்கி இருக்கும் bachelor திரைபடத்தில் ஜி.வி. பிரகாஷ் நடீத்துள்ளார். இத்திரைபடம் நாளை (டிசம்பர் 3 ஆம்) தேதி திரை அரங்கிற்க்கு வர உள்ளது.

தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் ஜி. வி. பிரகாஷ் குமார், திவ்யா பாரதி, முனிஷ் காந்த் உள்ளிட்ட பலர் உள்ளிட்ட நடிப்பில் இத்திரைபடம் நாளை திரைக்கு வர இருக்கிறது.

இது மட்டுமின்றி நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ‘rebel’ திரைபடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படபிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் ஆரம்பம் ஆனது.

ரெபெல் திரைபடத்தினை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இதனுடன் ஜி. வி. பிரகாஷ் குமாரின் மற்றுமொரு திரைபடமான ஜெயில் படத்தின் (jail glimpse) கிளிம்ப்ஸே நாளை மாலை 6.00 மணிக்கு வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்து உள்ளது.

selfie திரைபடத்தின் டிரைலர் கீழே கொடுக்கபட்டுள்ளது கண்டு மகிழுங்கள்…

Exit mobile version