லோகேஷ் கனகராஜிக்கு சொகுசு காரை பரிசளித்தார் கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜிக்கு சொகுசு காரை உலக நாயகன் பரிசளித்துள்ளார் தற்போது அதன் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது..

லோகேஷ் கனகராஜிக்கு சொகுசு காரை பரிசளித்தார் கமல்ஹாசன்
kamal haasan & lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன்,

காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் (03-06-2022 ) தேதியன்று உலகெங்கும் உள்ள திரையருங்குகளில் வெளியானது…

ரசிகர்களின் பெரும் எதிபார்ப்புகளிடையில் திரையில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலே 58 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியானது..விக்ரம் படத்தின் அடுத்த பாடல் எப்போ ரிலீஸ்

இதை தொடர்ந்து vikram திரைப்படம் வெளியான 3 நாட்களில் இந்தியா முழுவதும் சுமார் 100 கோடி வசூலையும்,

உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் 150 கோடியையும் குவித்து புதிய வசூல் சாதனையை படைத்தது..

இந்நிலையில் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு கடிதம் ஒன்று எழுத்தியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது பின்வருமாறு.

என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்திசயமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமசகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைபட்டதை விட அதிகம்..

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அயராது விழித்திருங்கள், அயராது தனித்திருங்கள், அயராது பசித்திருங்கள், உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் என கடிதத்தில் எழுதியிருந்தார்..காடுனு ஒண்ணு இருந்தா விக்ரம் டிரைலர் வெளியானது

இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இதை படிக்கும் நான் எவ்வளவு உணர்ச்சிவசபடுகிறேன் என்பதை வார்தைகளால் வெளிபடுத்த முடியாது! நன்றி ஆண்டவரே என குறிப்பிட்டு உள்ளார்..

இதை தொடர்ந்து, விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக உலகநாயகன் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு விலை உயர்ந்த lexus காரை பரிசாக வழங்கியுள்ளார்..

நடிகர் கமல் ஹாசன் lexus காரை லோகேஷ் கனகராஜிக்கு வழங்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.விக்ரம் படத்திற்க்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ்

Exit mobile version