சூர்யாவுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்தார் கமல் ஹாசன்
Last Updated on June 7, 2022 by Dinesh
சூர்யாவுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்துள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன் உற்சாகத்தில் ரசிகர்கள்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வந்து மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது..
விக்ரம் திரைப்படம் திரையருங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 நாட்கள் ஆகிய நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..
உலக அளவில் விக்ரம் திரையபடம் 150 கோடி வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டு வந்தது..
விக்ரம் படத்தில் கடைசி 3 நிமிடத்தில் rolex கதாபாத்திரத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் சூர்யாவின் காட்சிகள் ரசிகர்களை மிகவும் ஈர்த்துவிட்டது.
இதை தொடர்ந்து விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் நடிகர் சூர்யா நடிப்பார் என்று ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அதற்கான விடை இப்பொழுது கிடைத்துள்ளது..
vikram படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உலகநாயகன் கமல் ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது..
தரமான திரைப்படத்தை தாங்கிபிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை, திறமையான தரமான நடிகர்களையும் தான் அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் திரைபடத்தையும் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.
“கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அன்பு தம்பி சூர்யா, அன்புக்காக மட்டுமே அதை செய்தார்.
அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்”.
என தெரிவித்து விக்ரம் படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துகளையும் தனது பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்..
விக்ரம் (vikram 3) படத்தின் அடுத்த பாகத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து நடிப்பது உறுதியானதை அடுத்து ரசிகர்கள் இணையத்தில் vikram 3 ஹஸ்டாகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.லோகேஷ் கனகராஜிக்கு சொகுசு காரை பரிசளித்தார் கமல்ஹாசன்