Last Updated on December 19, 2022 by Dinesh
நேற்று கத்தார் நாட்டில் லூசைல் மைதானத்தில் கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் இடையே நடைபெற்றது..
![keerthy suresh movies](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/Adobe_Express_20221219_1843430_1-copy.jpg?resize=780%2C446&ssl=1)
கடந்த மாதம் கத்தாரில் கோலாகளமாக தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 நாடுகள் கலந்து கொண்டன.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு சுவார்யசம் வாய்ந்த போட்டிகலால் கால்பந்து ரசிகர்களை மிகவும் உற்சாகமுடன் வைத்திருந்தது இந்த உலக கோப்பை தொடர்..
நாளுக்கு நாள் விருவிருப்பை கூட்டி கொண்டு சென்ற கால்பந்து உலக கோப்பை 2022 இன் இறுதி போட்டி நேற்று திக் திக் நிமிடங்களை கொண்டு நிறைவடைந்தது.
உலக மக்கள் பலரும் உற்று நோக்கி கொண்டிருந்த இந்த உலக கோப்பை 2022 கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் இறுதி போட்டியில் மோதியது..
நேற்றைய பரப்பான ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் 3-3 என்ற கணக்கில் போட்டியை சமன் செய்த நிலையில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக உலக கோப்பை கால்பந்து தொடரை கைபற்றியது லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி..
![argentina next match](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/Adobe_Express_20221219_1844060_1-copy.jpg?resize=660%2C365&ssl=1)
இந்த விருவிருப்பான போட்டியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களும் டிவியில் நேரலையில் கண்டு ரசித்தனர்..
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நேற்று கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியினை தனது வீட்டில் நேரலையில் கண்டு ரசித்துள்ளார்.
![keerthy suresh hot](http://i0.wp.com/www.natshathiram.com/wp-content/uploads/2022/12/Adobe_Express_20221219_1846420_1-copy.jpg?resize=660%2C365&ssl=1)
அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் பெயர் போட்ட அர்ஜெண்டினா அணியின் ஜெஸ்ஸியை அணிந்து கொண்டு போட்டியில்,
அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை பார்த்து துள்ளி குதித்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார் நடிகை கீர்த்து சுரேஷ்..
இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்து உள்ளார்.
தற்போது இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..