Cinema NewsKollywood
Trending

அமீர் நேர்மையை எடைபோட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை சினேகன் அதிரடி

அமீர் நேர்மையை எடைபோட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை என பாடலாசியர் சினேகன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்..

ameerdirected movies

கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி திரைக்கு வந்து மிக பெரிய வெற்றி பெற்ற பருத்திவீரன் திரைப்படம் தற்போது வரை தமிழ் சினிமாவில் பேசும் பொருளாக அமைந்துள்ளது..

இதற்க்கு காரணம், பருத்திவீரன் திரைபடத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு இடையேயான கருத்து வேறுபாடு தான். பருத்திவீரன் படத்தினை இயக்கிய இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு பருத்திவீரன் படத்தை இயக்கினார்..

படத்தில் நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பியும் தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக அறியப்படும் கார்த்தி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம்

இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரபல தனியார் யுட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் இயக்குனர் அமீர் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை தெரிவித்திருந்தார்..

ஞானவேல் ராஜா குற்றசாட்டு

முதலில் பருத்திவீரன் படத்திற்க்கு இரண்டரை கோடி ரூபாய் பட்ஜெட் பேசி படத்தினை எடுக்க நானும் இயக்குனர் அமீரும் முடிவு செய்தோம்.

ஆனால், இரண்டரை கோடியை தாண்டி நான்கரை கோடி செலவானது, பருத்திவீரன் படத்தை ஆறு மாதத்தில் முடிப்பதாக சொல்லி நான்கரை வருடம் இழுத்துவிட்டார், பொய் கணக்குகளை காட்டி என் பணத்தை திருடினார், அவருக்கு சினிமாவே எடுக்க தெரியல என்னோட படத்தில் தான் அமீர் திரைப்படம் எடுக்க கற்று கொண்டார் என பல குற்றசாட்டுக்களை முன் வைத்தார்..

இந்த குற்றசாட்டுக்களுக்கு எல்லாம் பதிலடி தரும் விதமாக இயக்குனர் அமீர் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்..

அமீர் அறிக்கை

படப்பிடிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு காணாமல் போனவர் அவர்..

பருத்திவீரன் தொடர்பாகவும் என்னுடைய திரைபயனம் தொடர்பாகவும் ஞானவேல் ராஜா கூறிய கருத்துகளில் ஒன்று கூட உண்மையில்லை. பருத்திவீரன் படத்தின் தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை, முதற்கட்ட படபிடிப்பு வழங்கிய தொகையை தவிர அவர் வேறு எந்த தொகையையும் தராமல் படப்பிடிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு போனவர் அவர்.

பருத்திவீரன் படபிடிப்பு சூழல் அறிந்த திரைதுறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் கலைஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது எனக்கு வியப்பை தருகிறது..

தயாரிப்பாளர் ஞானவேல் குற்றசாட்டுக்கு இயக்குனர் அமீர் விளக்கமளித்து இருந்தார்..

இதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு சசி குமார், சமுத்திரகனி, சுதா கொங்காரா உள்ளிட்ட இயக்குனர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்..

இவர்களை தொடர்ந்து தற்போது பாடலாசிரியர் சினேகனும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு தனது கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார்..

பாடலாசிரியர் சினேகன்

நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பயணியாற்றி வருகிறேன்..

அவரின் நேர்மையை எடைபோட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை.

பருத்திவீரன் படத்தை முடிப்பதற்க்கு அவர் எவ்வளவு சிரமத்திற்க்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னை போன்றவர்களுக்கு தான் தெரியும்.

ஒருவரை விமர்சிப்பதற்க்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும் என பாடலாசிரியர் சினேகன் காட்டமாக தெரிவித்துள்ளார்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !