நெஞ்சுக்கு நீதி படகுழுவை வாழ்த்திய முதல்வர்

நெஞ்சுக்கு நீதி படகுழுவை வாழ்த்திய முதல்வர் mk Stalin புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

நெஞ்சுக்கு நீதி படகுழுவை வாழ்த்திய முதல்வர்
mk stalin

கனா படத்தினை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இரண்டாவதாக நெஞ்சுக்கு நீதி படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் உதய்நிதி ஸ்டாலின், தன்யா ரவிசந்திரன், ஆரி அர்ஜுனன், மயில்சாமி, சிவாங்கி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் நெஞ்சுக்கு நீதி படத்தினை தயாரிக்கிறார்..

ஹிந்தியில் இயக்குனர் அனுபவ் சின்ஹா எழுதி இயக்கிய article 15 என்ற திரைப்படம் பாலிவுட்டில் சினிமாவில் மிக பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இத்திரைபடம் தற்போது தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் படமாக்கபட்டுள்ளது..

article 15 படத்தின் கதையில் இருந்து தமிழ் சினிமாவிற்க்கு ஏற்றவாறு கதையில் சிறு சிறு மாற்றங்கள் மேற்கொள்ளபட்டு படம் எடுக்கபட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..

இதை தவிர நெஞ்சுக்கு நீதி படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

நெஞ்சுக்கு நீதி (Title track ), எங்கே நீதி, சேவகட்டு சேமையெல்லாம் ஆகிய பாடல்கள் வெளியாகியுள்ளன..

வரும் மே 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைபடத்தினை தமிழ்நாடு முதலமைச்சரும், உதய்நீதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க. ஸ்டாலின் நேற்று திரை அரங்கில் நெஞ்சுக்கு நீதி திரைபடத்தை கண்டு கழித்தார்..

நெஞ்சுக்கு நீதி திரைபடத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் திரை அரங்கிற்கு வெளியில் படக்குழுவினரை பாராட்டிய புகைபடங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது..

வைரலாகும் புகைபடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், உதய்நிதி ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியூர் உடன் உள்ளனர்.

Exit mobile version