Cinema NewsKollywood

அண்ணாத்த பஸ்ட் லுக்கில் ஸ்டைலான ரஜினி…

அண்ணாத்த பஸ்ட் லுக்கில் ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது…

அண்ணாத்த பஸ்ட் லுக்கில் ஸ்டைலான ரஜினி...
Rajini Kanth

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தனது 168 வது திரைப்படத்தின் பஸ்ட் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் திரைபடத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்து இருப்பார்.

இத்திரைபடத்தில் அவர் பல வருடங்கள் கழித்து போலீஸ் அதிகாரி தோற்றத்தில் திரையில் தோன்றியதில் அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழிச்சியை கொடுத்தது..

அதன் பிறகு, நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் 168 வது திரைப்படம் இயக்குனர் சிவா இயக்குவதாக தகவல்கள் வெளியாகின.

அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கடந்த 2020 பிப்ரவரி மாதம் சன் பிக்சர் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பதாக உறுதி செய்யபட்டு பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிப்புகளும் வெளிவந்தன..

இத்திரைபடத்தினை இயக்கும் இயக்குனர் சிவா இதற்க்கு முன் தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு திரைபடங்களை அஜித்தை வைத்து இயக்கினார்..

அந்த நான்கு திரைபடங்களும் அஜீத் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.. பின்னர், தற்போது முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து அண்ணாத்த திரைபடத்தை இயக்கி உள்ளார்.

அண்ணாத்த பஸ்ட் லுக்கில் ஸ்டைலான ரஜினி…

அண்ணாத்த திரைபடத்தின் படபிடிப்பு பணிகள் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டில் தொடக்கபட்ட நிலையில் படத்தின் காட்சிகள் கொல்கத்தா, புனே போன்ற நகரங்களில் படமாக்கபட்டுள்ளன.

மேலும் இப்படத்தின் ஒரு கட்ட படபிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் அங்கு கொரோனா பரவல் அதிகரித்ததின் காரணமாக அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலே நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியது.

அதன் பின், சென்னையில் மார்ச் மாதத்தில் தொடங்கிய படபிடிப்பு ஒரே கட்டமாக 30 நாட்கள் படபிடிப்பு காட்சிகள் எடுக்கபட்டன.

இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தனது அண்ணாத்த திரைபடத்தின் அடுத்த கட்ட படபிடிப்புக்காக. மீண்டும் ரஜினி ஹைத்ராபாத் சென்றார்.

ஹைத்ராபாத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் விரு விருப்பன சண்டை காட்சிகள் படமாக்கபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து 2021 ஏப்ரல் மாதத்தில் நடிகை நயன்தாரா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த காட்சிகள் மூன்று நாட்கள் படமாக்கபட்டன.

இத்திரைபடம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளிவர இருந்த நிலையில் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்ததின் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போனது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைபடத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர் நேற்று ரஜினி ரசிகர்களுக்காக அறிவிப்பு ஒன்றை அறிவித்தது.

அந்த அறிவிப்பில் அண்ணாத்த திரைபடத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்து இருந்தது.

அதன் படி, இன்று விநாய்கர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதன் கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

பஸ்ட் லுக் போஸ்டரில் வெள்ள வேட்டி, வெள்ள சட்டையுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ரஜினியின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக கலக்கி கொண்டு வருகிறது.

அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !