ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு

ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு இணையத்தில் தீயாய் பரவும் வைரல் புகைப்படம்..

ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு
rajini & sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி எழுதி இயக்கிய Don திரைப்படம் கடந்த மே (13 -05-2022 ) திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளது..

இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், சமுத்திரகணி, எஸ்.ஜே. சூர்யா, சூரி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், சிங்கம்புலி, மனோ பாலா உள்ளிட்ட ஏறலாமானோர் இப்படத்தில் நடித்திருந்தனர்..

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த டான் படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார்.

எடிட்டராக நாகூறான் ராமசந்திரன் ஒளிப்பதிவாளராக கே.எம். பாஸ்கரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

கடந்த வருடம் (2021) தொடங்கபட்ட டான் திரையப்டத்தின் படபிடிப்புகள் தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், பொள்ளாச்சி மற்றும் உடமலைபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் படபிடிப்புகள் நடைபெற்றன..

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்குகிடையில் மே 13 -ஆம் தேதி DON திரைப்படம் திரைக்கு வந்தது. இத்திரைபடம் ரசிகர்களிடம் இருந்தும் சினிமா விமர்சகர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

குறிப்பாக, படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சமுத்திரகணி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோரின் நடிப்பில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது..

இந்நிலையில் DON திரைப்படம் உலக அளவில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளிவந்தது. இதை தொடர்ந்து டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் படக்குழுவினற்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன..

இதையடுத்து டான் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து don பட வெற்றிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்..

இதனை தனது சமூக வலைத்தளம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருப்பது. இந்திய சினிமாவின் டான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தேன் எனவும் அவரது ஆசீர்வாதத்தை பெற்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த 60 நிமிட சந்திப்பு என் வாழ்நாள் நினைவாக இருக்கும் உங்கள் எனக்கும் உங்கள் நேரம் ஒதுக்கியத்திற்க்கு நன்றி ‘தலைவா’ DON படக்குழு சார்பாக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version