Cinema NewsKollywood

Marudhaani : அண்ணாத்த படத்தின் பாடல்…

Marudhaani : அண்ணாத்த படத்தின் பாடல் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது..

Marudhaani : அண்ணாத்த படத்தின் பாடல்...
Annatthe

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைபடத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 168 வது படமான அண்ணாத்த திரைப்படத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினரால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக சரியாக 6.00மணிக்கும் அண்ணாத்த படத்தின் மருதாணி பாடல் வெளியானது.

மருதாணி பாடல் வெளியான சிறிது நேரத்தில் இணையத்தில் படு வேகமாக பரவி ட்விட்டரில் ட்ரெண்டிங் இடத்தை பிடித்தது Marudhaani எனற ஹஸ்டாக்.

இதற்க்கு முன் அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்களில் முதல் பாடலான “அண்ணாத்தே அண்ணாத்தே” என்ற பாடலை மறைந்த பாடகர் எஸ்‌பி பாலசுப்ரமணியம் இறுதியாக பாடிய பாடல் தான் இது.

இந்த பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது பாடகர் எஸ்‌பி பாலசுப்ரமணியம் இறுதியாக பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் இப்பாடலை கேட்டதும் அவர் பாடிய பாடல்களை நினைவு கூர்ந்து அவரை தற்போது மிஸ் பண்ணுவதாக உருக்கமான கமெண்ட்களை பதிவிட்டும் வந்தனர்.

“அண்ணாத்தே அண்ணாத்தே” பாடல்இது வரை இணையத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.

இப்பாடலை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடலாக சார காற்றே (saara kaattrae) பாடல் வெளியானது.

இப்பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் மெலோடி பாடல்களை கேட்காமல் இருந்த ரசிகர்களுக்கு ரஜினி துள்ளலான நடனத்தால் வெளிவந்துள்ள இப்பாடல் மிகுந்த ஈர்ப்பை பெற்றுள்ளது..

Marudhaani : அண்ணாத்த படத்தின் பாடல்

இதை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் மூன்றாவது மருதாணி இன்று மாலை வெளியாகி உள்ளது. இப்பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகைகள் மீனா, குஷ்பூ ஆகியோர் நடனம் ஆடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி இந்த பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆச்சரியமாகவே இருந்தது..

marudhaani பாடல் வெளியான 4 மணி நேரத்தில் எழு லட்சத்திற்க்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இப்பாடல் மற்றும் அண்ணாத்த படம் வெற்றி பெற ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாத்த படத்தில் இருந்து இது வரை வெளிவந்த புகைபடங்கள், போஸ்டர்கள்,பாடல்கள் என அனைத்திலும் ரஜினி பெரும்பாலும் வேட்டி, சட்டையுடன் வலம் வருகிறார்.அண்ணாத்த பஸ்ட் லுக்கில் ஸ்டைலான ரஜினி…

இதனால், அண்ணாத்த படத்தின் மூலம் மீண்டும் பழைய ரஜினியை காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. வைரலாகும் அண்ணாத்த படத்தின் மோஷன்…

அண்ணாத்த திரைப்படம் வரும் 2021 தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !