Cinema NewsKollywood
Trending

பிரபல நடிகரை மணந்த சீரியல் நடிகை சங்கீதா

பிரபல நடிகரை மணந்த சீரியல் நடிகை சங்கீதா இணையத்தில் வைரலாகும் புகைபடங்கள்…

serial actress sangeetha

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதா திருமணம் செய்து கொண்டார்.

இதனை நடிகரும், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியீட்டு இது படபிடிப்பு அல்ல உண்மையான திருமணம் என திருமண வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்..

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் கோலிவுட்டில் காமெடி கிங் மேக்கர்களாக வலம் வந்தவர்கள்..

நாகேஷ் முதல் தற்போது டாப் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு வரை ஒவ்வொருவரும் தங்களது தனித்தன்மை வாய்ந்த உடல் மொழிகளால் மக்களை திரையரங்கின் மூலம் சிரிக்க வைத்து வந்தவர்கள்..

இதில் சந்தானம், யோகி பாபு ரைமீங் காமெடிகளில் கலக்கி வந்தாலும் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை நமக்கு அவ்வ பொழுது நினைவை தரும்..

உடல் மொழியாலும், நகைச்சுவை மற்றும் ரைமிங் காமெடிகளால் மட்டும் தான் சிரிக்க வைக்க முடியும் என்றில்லை வாய் மொழியாலும் கூட சிரிக்க வைக்க முடியும்

என தனக்கு உரிய பாணியில் நகைச்சுவையில் அசத்தில் வருகிறார் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி..

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் முதன் முதலில் நடிகராக அறிமுகமானவர்..

இவர் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்தே நன்கு பரீட்சியமானவர்..

உடல் மொழியும், வாய் மொழியும் நெல்சன் திலீப் குமாருக்கு பிடித்து போக தனது முதல் படத்திலே நடிக்க வாய்ப்பையும் கொடுத்துள்ளார்..

கோலமாவு கோகிலாவுக்கு பிறகு டாக்டர், பீஸ்ட், ஜெய்லர் என தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்..

redin kingsley marriage

இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது..

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர்கள் இருவரது திருமணம் நடைபெற்றதுள்ளது.

இத் திருமணம் இருவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது..

redin kingsley movies

சின்னத்திரை நடிகை சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தற்போது வருகிறார்.

மேலும், இவர் பீஸ்ட் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்..

தற்போது, நட்சத்திர ஜோடியான ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா திருமண புகைபடங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்த புதுமண ஜோடிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பிலும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !