Cinema NewsKollywood

47வருட திரை பயணத்தை கேக் வெட்டி கொண்டாடிய Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது திரையுல பயணத்தை தொடங்கி இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவடைந்ததை தன் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார் நடிகர் ரஜினிகாந்த்..

47வருட திரை பயணத்தை கேக் வெட்டி கொண்டாடிய Rajinikanth
Rajinikanth

கடந்த 1950-இல் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த். பெங்களூரு நகர பேருந்தில் பஸ் கண்டக்டர் ஆக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

கண்டக்டர் பணியில் இருக்கும் போதே சினிமா மீதான ஈர்ப்பும், படங்களில் நடிக்க அவருக்கு இருந்த ஆர்வமும் அவரை வெகு விரைவில் சினிமாவில் கால் தடம் பதிக்கவைத்தது..

ஆம், இயக்குனர் பாலசந்தர் முதன் முதலில் ரஜினிகாந்தை பார்த்த பொழுது அவரது ஸ்டைல் பாலசந்தற்க்கு மிகவும் பிடித்து போக தான் இயக்கும் படத்தில் நீங்கள் நடித்தாக வேண்டும் என கூறி ரஜினியை முதன் முதலில் தமிழ் படத்தில் நடிக்க வைத்தார் மறைந்த இயக்குனர் பாலசந்தர்..

நடிகர் ரஜினிகாந்த் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இயக்குனர் பாலசந்தர் 1975 ஆம் ஆண்டு இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் தான். தனது முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த ரஜினி

தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தனக்கே உரித்தான ஸ்டைல் ஆன நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்..

இதை தொடர்ந்து, கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் நடிகர் ரஜினி காந்திற்க்கு ஒரு பெரிய திருப்பு முனை வாய்ந்த திரைப்படம் என்றே சொல்லலாம்,

அந்த அளவிற்க்கு பாட்ஷா திரைப்படம் ரஜினிக்கு அன்றும் இன்றும் பெரும் பேசும் பொருளாக அமைந்தது..

அது மட்டுமின்றி, அப்போதைய காலகட்டத்தில் வசூல் ரீதியாகும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது பாட்ஷா திரைப்படம்.

இந்த படத்திற்க்கு பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் கிட்டதட்ட பிளாக் பஸ்டர் திரைபடங்கள் என சொன்னால் அது மிகையாகாது..

அந்த வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது..

மனித வடிவிலான ரோபோட்டிக் பற்றிய கதையை மிகுந்த தொழில்நுட்பத்துடன் எடுக்கபட்ட எந்திரன் திரைபடத்தில் ரஜினி ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரு கதாபாத்திரங்களில் பின்னி எடுத்திருந்தார்..

இத்திரைபடம் இந்திய அளவில் சுமார் 100 கோடி வசூலை படைத்ததாக அப்போதே பேசப்பட்டு வந்தது..

இந்த படங்களின் வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் ரஜினியின் மாற்றும்மொரு நடிப்பு அவதாரத்தை வெளிபடுத்தி இருந்தது..

பா. ரஞ்சித்தின் கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் வெளியான காலகட்டங்களில் பெரும் பேசு பொருளாகவும் இவ்விரண்டு திரைபடங்கள் இருந்தன..

Rajinikanth Celebrate 47year of cinema

அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 47 வருட சினிமா பயணத்தை தன் மனைவி, மகள்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்..

இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டு.. 47 வருட ரஜினிசம் சுத்த உழைப்பு, அர்ப்பணிப்பு ! அவருக்கு பிறந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்..

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !