Cinema NewsKollywood

எத்ற்கும் துணிந்தவன் படத்தின் புதிய பாடல்

எத்ற்கும் துணிந்தவன் படத்தின் புதிய பாடல் உள்ளம் உருகுதய்யா என்ற பாடல் இன்று இணையத்தில் வெளியானது..

எத்ற்கும் துணிந்தவன் படத்தின் புதிய பாடல்
ET Second Song

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் உடன் முதன் முறையாக இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும், படத்தில் சத்ய ராஜ், வினய், எம்.எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், ரெடின் கிங்க்ஸ்லே, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ET படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்த வேலையில் நடிகர் வினய்,

ET படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டு இயக்குனர் பாண்டிராஜ் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

கடந்த ஜூலை மாதம் ET படத்தின் முதல் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து வெளியான படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதனை தொடர்ந்து ET படத்தின் முதல் பாடல் வாடா தம்பி என்ற லிரிகள் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,

இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

எத்ற்கும் துணிந்தவன் படத்தின் புதிய பாடல்

அதன் படி, இன்று மாலை 6.00 மணி அளவில் ET படத்தின் இரண்டாவது பாடல் உள்ளம் உருகுதய்யா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் யுக பாரதி எழுதியுள்ளார்.

.இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடகர்கள் பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாசன், பிரிந்தா மாணிக்கவாசகன் உள்ளிட்டோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர். ரத்னவேலு மற்றும் எடிட்டராக ரூபேன் ஆகியோர் ET படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

ET திரைப்படம் வரும் 2022 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிபிடத்தக்கது.

கீழே படத்தின் இரண்டாவது பாடல் கொடுக்கபட்டுள்ளது பார்த்து மகிழுங்கள்…

Show More

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !