ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை

ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை ஒன்றை இன்று படைத்துள்ளது அதனை பின்வருமாறு பார்ப்போம்…

ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை
Suriya

கடந்த ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் மிக முக்கிய திரைபடமாக அனைவரது கவனத்தையும் பெருமளவு ஈர்த்த திரைப்படம் தான் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம்..

இத்திரைபடம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக அமசான் பிரைம் வீடியோவில் படக்குழுவினரால் ரிலீஸ் செய்யபட்டது.

இதற்க்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரறை போற்று திரைப்படம் திரை அரங்கில் வெளியாகும்,

என ரசிகர்களால் எதிர்பார்த்து வந்த நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக சூரறை போற்று திரைப்படம் நேரடியாக அமசான் பிரைமில் வெளியிடபட்டது.

நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்களில் முதன் முதலாக திரைக்கு வரமால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான முதல் திரைப்படம் சூரறை போற்று.

இது சூர்யாவின் ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை கொடுத்தாலும் சூரறை போற்று திரைப்படம் ஓடிடியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், ஆதரவும் பெற்று சூரறை போற்று வெற்றி படமாக அமைந்தது.

இதனை அடுத்து இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த,

ஜெய் பீம் திரைபடத்தினை 2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் படத்தினை தயாரித்துள்ளனர்.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட .சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் இரண்டாம் முறையாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழகத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கபட்ட ஜெய் பீம் திரைபடத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள்,

திரையுல பிரபலங்கள், இயக்குனர்கள் மேலும் தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் என பலராலும் ஜெய் பீம் திரைபடத்தினை பாராட்டி வரவேற்றனர்..

இது மட்டுமின்றி திரைபடங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் பிரபல தளமான ஐபிடிஎம் தளத்தில் உலக தரவரிசை பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது.

அதை போன்று தற்போது மீண்டும் மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளது ஜெய் பீம். அவை பிரபல ஆஸ்கார் விருதின் அதிகாரபூர்வமான யுட்யூப் வலைதளத்தில் ஜெய் பீம் படத்தின் சில காட்சிகள் மற்றும் படத்தின் இயக்குனர் டி.ஜே. ஞானவேலின் விளக்கமும் சேர்த்து ஒளிபரப்பபட்டுள்ளது.

ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை

உலக திரைப்படங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திரைபடங்களை தேர்ந்து எடுத்து அத்திரைபடத்தை உருவாக்கிய படக்குழுவினரின் முயற்ச்சியையும்,

அவர்களின் அனுபவங்களையும் அங்கீகரிக்கும் வகையில் #SceneAtAcademy என்ற தலைப்பில் ஆஸ்கார் அகாடமி நிறுவனம் தனது அதிகாரபூர்வமான யுட்யூப் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் தேர்ந்தெடுக்கும் படங்களின் காட்சிகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ஜெய் பீம் படம் தேர்ந்தெடுக்கபட்டு அப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் மற்றும் இயக்குனர் டி.ஜே. ஞானவேலின் விளக்கம் ஆகியவற்றை அடங்கிய 12.48 நிமிடங்கள் அடங்கிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது ஆஸ்கார் அகாடமி.

இது வரையில் ஆஸ்கார் அகாடமியின் யுட்யூப் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் தமிழ் திரைபடங்களை வெளியிட்டது இல்லை.

தற்போது ஆஸ்கார் அகாடமியில் காட்சிபடுத்தபட்ட முதல் தமிழ் திரைப்படம் ஜெய் பீம் என்ற ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

Exit mobile version