நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு

நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் இன்று அறிவித்தார்…

நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு
udhaya nidhi stalin

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிசந்திரன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி..

கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட்டில் Article 15 என்ற திரைப்படம் திரைக்கு வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.

ஹிந்தியில் article 15 படத்தினை இயக்குனர் அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கி இருந்தார்..

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைபற்றி இருந்தார். ஹிந்தியில் article 15 என்ற வெற்றி படத்தினை தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் படமாக்கபட்டு வருகிறது..

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இந்த படத்தினையும் இயக்கி உள்ளார். ஏற்கனவே சென்சாருக்கு சென்றிருந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சென்சார் செய்யபட்டு இன்று அதற்கான சான்றிதழும் வெளியிடபட்டுள்ளது..

நெஞ்சுக்கு நீதி திரைபடத்திற்க்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்து இருந்தார்..

இதை தொடர்ந்து, இன்று மாலை தயாரிப்பாளர் போனி கபூர் மற்றுமொரு சூப்பரான அறிவிப்பை அறிவித்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் வரும் மே 9 ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Exit mobile version