cobra: படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் தகவல்

cobra: படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் தகவல் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது..

cobra: படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் தகவல்
Chiyaan Vikram

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் cobra படத்தினை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது..

கோப்ரா சியான் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, கே‌எஸ். ரவிகுமார், மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்திவ் ஆகியோருடன் பிரபல கிரிக்கெட் ப்ளேயர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்..

மேலும் seven screen studios தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.. படத்திற்க்கு ஒளிப்பதிவாளராக ஹரீஷ் கண்ணன் எடிட்டராக புவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்..

சமீபத்தில் கோப்ரா படத்தின் படபிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறுகையில் கிட்டதட்ட மூன்று வருட படபிடிப்பு முடிவுக்கு வந்தது சியான் விக்ரம் மற்றும் என்னை நம்பி என்னுடன் அனைத்து போராட்டங்கள் மற்றும் கடினமான காலங்களில்,

பயணம் செய்து cobra தரிசனத்தில் நம்பிக்கை கொண்ட எனது ஒட்டுமொத்த குழுவிற்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !! உங்கள் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் கடமைபட்டிருக்கிறேன் என தனது நெகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார்..

வரும் மே மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் சியான் விக்ரமின் கோப்ரா திரைபடத்தின் முதல் பாடலாக தும்பி துள்ளல் என்ற பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளது படக்குழு.

இதற்க்கான அறிவிப்பு ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக நாளை மாலை 6.00pm இரண்டாவது பாடலாக ஆதீரா வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது..

தற்போது இந்த அறிவிப்பானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் ட்ரெண்ட்ங்கிலும் உள்ளது..

கீழே கோப்ரா படத்தின் முதல் பாடல் கொடுக்கபட்டுள்ளது கண்டு ரசியுங்கள்…

Exit mobile version