bigg boss tamil : வரலாற்றில் முதன் முறையாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றபட்ட பிரதீப் ஆண்டனி,
பிக் பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பிய உலக நாயகன் கமல்ஹாசன்..

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனியார் தொலைகாட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 தொடங்கி வெற்றிகரமாக தற்போது 7-வது சீசன் நடந்து வருகிறது..
இந்நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் 7 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பிக் ப்ரதர் (big brother ) என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் அந்தந்த மொழிகளில், அந்தந்த நாட்டின் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி இந்தியாவில் கடந்த 2006 – 2007 கால கட்டங்களில் முதன் முறையாக இந்திய தொலைக்காட்சிகளில் பிக் பாஸ் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வருகிறது..
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த காலங்களில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது முதல் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை நடத்தியது..
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் சமூகத்தில் பிரபலமாக கருதபடும்
நபர்களை கருத்தில் கொண்டு தேர்வு செய்யபட்டு 100 நாட்கள் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கபடுகின்றனர்..
தற்போது வெற்றிகரமாக பிக் பாஸ் தமிழ் 6 சீசன்களை கடந்து தொலைக்காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை
தொடந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 (bigg boss tamil season 7 ) தற்போது நல்ல வரவேற்ப்புடன் நடைபெற்று வருகிறது..
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தற்போது பரபரப்பையும், சுவார்யஷிய நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளது.
பிக் பாஸில் கடந்த 6 சீசன்களில் நடைபெறாத நிகழ்வு ஒன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இல் நடைபெற்றுள்ளது..
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுக்கப்ட்டு பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றபட்டுள்ளார்.
வழக்கமாக சனிகிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
அப்போது பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் வீட்டில் தங்களது இருக்கும்
நிறை, குறைகளை கேட்டறிந்து அதனை முறையாக விசாரித்து அவர்களுக்கு தீர்வை வழங்கி வருவார்..
அந்த வகையில் நேற்று ( 04-11-2023) கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது
பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பல குற்றசாட்டுக்களை கமலிடம் தெரிவித்தனர்..
இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களை தனி தனியாக convection room அழைக்கபட்டு அவர்களது குற்றசாட்டுக்களை கேட்டறிந்தார்..
பிரதீப் ஆண்டனி
அப்போது சக போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது வைத்த குற்றசாட்டுகள் பிரதீப் ரொம்பவும் கெட்ட வார்தைகள் உபயோகிப்பதாகவும் சக போட்டியாளரை மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், .
பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறிய வார்தைகளை பேசுவதாகவும், பாத்ரூம் போனா கூட கதவை சாத்தி கொண்டு போக மாட்டார் நாம் கதவை சாத்திட்டு போங்க என்று சொன்னால்,
நான் அப்படி தான் போவேன், அப்படி தான் பேசுவேன் என கூறுகிறார் என சக போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது குற்றசாட்டுக்களை அடுக்கி வைத்தனர்..
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் பிரதீப் ஆண்டனியை கன்வெக்ஷன் ரூமுக்கு அழைத்து,
எனக்கு இருக்க கூடிய கருத்துக்கள் என்னணு ஓர் அளவுக்கு புரிஞ்சி இருக்கும் உங்களுக்கு ஆனா,
என்கிட்ட இருக்க கருத்த மட்டுமே வச்சி என்கிட்ட ரெட் கார்ட் இருக்கு அதனால,
இது என்னுடைய கோவமாக என்னுடைய தாபமாக என்னுடைய பட்சமாக இந்த முடிவ எடுக்க முடியாது.
அதனால் நான் ஜனநாயக ரீதியாக மற்ற போட்டியாளர்களிடம் கருத்தை கேட்டேன் அவற்றில் பெரும்பாலானவர்கள் நீங்கள் இந்த வீட்டில் இருப்பதை விரும்பவில்லை,
முக்கியமாக பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை அதனால் நீங்கள் இந்த வீட்டில் இருந்து வெளியேறிவிடலாம் என அறிவித்தார்..
இதனையடுத்து பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுக்கபட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன் முறையாக ஒரு போட்டியாளர் ரெட் கார்ட் பெற்று வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி உள்ளது..
Last Video of #PradeepAnthony at #biggbosstamil7 house#biggbosstamil
— Imadh (@MSimath) November 4, 2023
pic.twitter.com/qwNS87fWZn