போகோ எக்ஸ்3 இன்று இந்தியாவில் அறிமுகமானது
Last Updated on June 3, 2021 by Dinesh
போகோ எக்ஸ்3 இன்று இந்தியாவில் அறிமுகமானது அதன் விலை என்ன? முக்கிய அம்சங்கள் என்ன? என்பதை பற்றிய முழு விவரம் கிழே.

இன்று poco X3 இந்தியாவில் அறிமுகமானது ஏற்கனவே பிப்ரவரி மாதம் போகோ எக்ஸ் 2 ஸ்மார்ட் ஃபோன் வெளியானது இந்த மாடல் மொபைல் கேம்மிங் பிரியர்களுக்கு வசதியான மாடல் என்று கூறப்படுகிறது.
போகோ எக்ஸ்3 இன்று இந்தியாவில் அறிமுகமானது
போகோ எக்ஸ் 2 மொபைல் மாடல் வெற்றியை தொடர்ந்து போகோ எக்ஸ்3 இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது .
நியூ மாடல் போன் போகோ எக்ஸ்3 எப்போது விற்பனை?
புதிய மொபைல் மாடல் போகோ எக்ஸ்3 மாடல் ஸ்மார்ட் ஃபோன் கடந்த 10-நாட்களுக்கு முன்னர் ஐரோப்பா சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகபடுத்தபட்டது.
இதன் தொடர்ச்சியாக சில மாற்றங்கள் செய்து போகோ எக்ஸ்3 தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது.
தற்போது இந்தியாவில் போகோ எக்ஸ்3 ஸ்மார்ட் ஃபோன் 16999 விலையில் 6ஜிபி ரம், 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல், 18499 விலையில் 6ஜிபி ரம், 128ஜிபி
இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் மற்றும் 19,999 விலையில் 8ஜிபி ரம், 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல்கள் வரும் செப்டெம்பர் 29 மதியம் 12 மணிக்கு பிலிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.
போகோ எக்ஸ்3 விவரம்
இதன் மொபைலின் டிஸ்ப்ளே அளவு 6.67இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
மேலும் 120எச்ஜெட் மற்றும் 240 டச் சாம்லிங்க் மற்றும் எச்டிஆர் 10 சான்றிதழை கொண்டுள்ளது .
இதில் டைனமிக் ஸ்விட்ச் வியூவர் அமைப்பை கொண்டு 120 எச்ஜெட் ஸிமூதர் வியூலியும், 90 எச்ஜெட் பவர் எஃபிசியன்சிலியும் வேலை செய்கிறது..
ஒயர்லெஸ் ஆடியோவில் குயல்கோம்ம் அப்ட்க்ஸ் எச்டி சப்போர்ட் கொண்டு ஹை குவாலிடி ஒயர்லெஸ் எச்டி சவுண்ட் மற்றும் 24பிட் ம்யூசிக் க்வாலிட்டி புளுடூத்திலும் கொடுக்கிறது
போகோ எக்ஸ்3. மொபைலின் பேக் பேனலில் போகோ லோகோவிற்கு ஹோலோக்ரபி டிசைன் பயன்படுத்தபட்டுள்ளது..
3.5எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் சைட் மவுண்டாட் ஃபிங்கர் பிரிண்ட் இது போக ஃபேஸ் லாக் வசதியும் கொடுக்கபட்டு இருக்கிறது மேலும் கோரிங்க் கொரில்லா கிளாஸ் 5 வழங்கியுள்ளது.
போக்கோ எக்ஸ்3-இல் இரண்டு சிம்களை பயன்படுத்த முடியும் இந்த மாடலில் மெமோரி கார்டுக்கு என தனி வசதி எதும் இல்லை.
புளு கலர், க்ரே கலர் என இரு வகையான வண்ணங்களில் விற்பனைக்கு வெளிவருகிறது.
கேமரா மற்றும் பேட்டரி
இந்த வகையான மாடலில் பிரைமரி கேமரா 64 மெகா பிக்சல், கூடவே 13-மெகா பிக்சல் வசதியும் உள்ளது.
ஃப்ரண்ட் கேமராவில் 20-மெகா பிக்சல் வசதியும் கொடுக்கபட்டு இருக்கிறது மேலும் எம்ஐயுஐ 12 ரன் ஆகும்.
எனவும் விளம்பரங்கள் எதுவும் வராது என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது இந்த மொபைல் ஸ்நாப்ட்ராகன் 732ஜியில் உருவாகபட்டுள்ளது.
டைப் சி அமைப்பு கொண்ட 60000எம்எச் பேட்டரி வசதியுடன் 26% சார்ஜ் ஸ்பீட் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
போகோ எக்ஸ்3 மொபைல் 165.3×76.8×9.4மிமீ அளவும் 215 கிராம் எடையும் கொண்டுள்ளது.