ரியல் மி மொபைல் போன் இப்போது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களுள் இப்பொழுது செல்போன் இணைந்து விட்டது.
மொபைல் போன் நமக்கு பல்வேறு தருணங்களில் பயனுள்ளதாகவும், அவசர தேவைகள், தொலைதூர தொடர்புகள் போன்ற காரணங்களுக்காக செல்போன் நன்மைகள் தருகின்றன.
இதில் பலபேர் செல்போன் இல்லாமல் எனக்கு வேலை நடக்காது என்று சொல்பவர்களையும் நாம் பார்த்திருப்போம்.
அதே போன்று, மொபைல் பிரியர்கள் அவ்வப்போது விற்பனைக்கு வரும் நியூ மாடல் மொபைல், பெஸ்ட் மொபைல் போன் என்ன என்பதனை ஆராய்ந்து அதனை முதலில் உபயோகிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
இதற்கென தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் செல்போன் கம்பனிகள் தொடர்ந்து கண்ணை கவரும் புது புது டிசைன்கள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் நிறைந்த மொபைல்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்க்கும், மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் படி அவர்களை கவரும்
வகையில் 4ஜி மொபைல் விலை மற்றும் கண்ணை கவரும் வகையில் டிசைன் செய்யபட்டு இருக்கும். அதே போன்று தற்போது மொபைல் பிரியர்களை கவரும் வகையில்
அற்புதமான டிசைனில், பட்ஜெட்டில் மொபைல் வாங்க கூடியவர்களுக்கும் இந்த ரியல் மி மொபைல் ரேட் அமைந்து இருக்கிறது.
ரியல் மி மொபைல் போன் இப்போது பட்ஜெட் விலையில்…
ரியல் மி நிறுவனத்தின் நார்சோ 30ப்ரோ 5ஜி கடந்த 24ஆம் தேதி பிலிப்கார்டில் விற்பனைக்கு வந்தது.
இதனை தொடர்ந்து தற்போது ரியல் மி நார்சோ 30ஏ மொபைல் வரும் மார்ச் 5ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ரியல் மி நார்சோ 30ஏ(realme narzo 30a specifications)
realme narzo 30a -வில் 12என்எம் ஆக்டா கோர் ஹெலிஓ ஜி85(helio G85) செயலி மூலம் இயக்கபடுவதால் இதன் கேமிங்க் பொறுத்தவரை உங்களுக்கு ஸ்மூத்தான அனுபவத்தை தருகிறது.
இந்த மாடலின் டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.5 ஃபுல் ஸ்கிரீன் கொடுக்கபட்டுள்ளதால் இதில் முழு திரையில் வீடியோகளை காணலாம்.
அதிவேக சார்ஜ் 18w – வகை டைப் சி அமைப்பை கொண்டுள்ளது நார்சோ 30ஏ 9வி /2ஏ சார்ஜ்ஜருடன் வருகிறது இது நம்ப முடியாத வேகத்தில் பிளாஷ் சார்ஜ் ஆதரிக்கிறது.
இதன் பேட்டரி 6000mah பவர் கொண்டதால் கேமிங்க் விளையாடுபவர்களுக்கு ஏற்றதாக அமையும் என தெரிவிக்கபடுகிறது மேலும் இதில் ரிவர்ஸ் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
கேமரா பொருத்தமட்டில் பின்புறத்தில். ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் 13 மெகா பிக்சல் ஏஐ டூயல் கேமரா உடன் பிளாஷ் லைட் இடம் பெற்றுயிருக்கிறது. மொபைலின் முன்புறத்தில் 8மெகா பிக்சல் கேமரா கொண்டுள்ளது.
நார்சோ 30ஏ-வில் இரண்டு நானோ சிம்கள் மற்றும் ஒரு மெமரி கார்ட் ஒரே நேரத்தில் பொருத்தும் படி இதன் ஸ்லாட் வடிவமைக்கபட்டு இருக்கிறது.
இது உங்களுடைய போட்டோக்கள், வீடியோகளை அதிக அளவு சேமிக்க பயனுள்ளதாக இருக்கும்.
ரியல் மி மொபைல் போன் நார்சோ 30ஏ 6.5டிஸ்ப்ளே அமைப்புடன் 3ஜிபி ரம், 32ஜிபி இன்புய்ல்ட் ஸ்டோரேஜ் மற்றும் அண்ட்ராய்ட் 10 வெர்ஷன் கொண்ட மொபைல் மார்ச் 5ஆம் தேதி பிலிப்கார்டில் விற்பனை செய்யபடுகிறது.