FeaturesTechnology

ஒன் பிளஸ் மொபைல் புதிய மாடல் நாளை வருகை…

ஒன் பிளஸ் மொபைல் புதிய மாடல் நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகை தர உள்ளது…

ஒன் பிளஸ் மொபைல் புதிய மாடல் நாளை வருகை...
one plus nord ceg 5g

ஒன் பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நோர்ட் சீரிஸ் வகயில் அடித்த மாடலாக தற்போது ஒன் பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விற்பனைக்கு சந்தைக்கு வர உள்ளது.

இந்த நியூ மாடல் மொபைல் முன்னதாக வெளிவந்த நோர்ட் மாடலின் விலையை விட தற்போது வெளி வர இருக்கும் நோர்ட் சிஇ மாடலின் விலை சற்று குறைவாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

ஆனலைன் விற்பனையில் இந்த ஒன் பிளஸ் நியூ மாடல் மொபைல் 64 ஜி‌பி ஸ்டோரேஜ் உடன் 6 ஜி‌பி ரம் மொபைலின் விலை 24,999 ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது.

மேலும் இவை மூன்று வித அம்சங்களாக உருவாக்கம் செய்யபட்டுள்ளது. அவைகள் 128 ஜி‌பி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜி‌பி ரம், 256 ஜி‌பி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜி‌பி ரம் ஆகிய அம்சங்களிலும் கிடைக்கிறது..

இதில் அதிகம் ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களின் விலையை பொறுத்தவரை 128 ஜி‌பி ஸ்டோரேஜ் 8 ஜி‌பி ரம் மொபைலின் விலை 27,999 ஆகவும், 256 ஜி‌பி ஸ்டோரேஜ் 12 ஜி‌பி ரம் மொபைல் விலை 29,999 ஆகவும் விற்பனைக்கு வந்துள்ளது..

ஒன் பிளஸ் மொபைல் புதிய மாடல் முழு விவரம்:

Display

இதன் டிஸ்ப்ளே அளவு பொறுத்தவரை 6.43இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கபட்டுள்ளது.

இவை சென்டி மீட்டர் அளவில் 16.33cm அளவை பெற்றுள்ளது. மேலும் இதில் 409 பி‌பி‌ஐ திறன் கொண்ட AMOLED இதனுடன் பொருத்தபட்டுள்ளது.

மொபைலில் நீங்கள் உபயோகித்த ஆப்களை குளோஸ் செய்யும் போது அவை ரெஃப்ரெஷ் 90எச்‌ஜெட் அளவில் இயங்கி வேலை செய்கிறது.

Camera

மொபைலின் பின்புறத்தில் மூன்று வித கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. அவை 64 மெகா பிக்சல் கேமரா பிரைமரி கேமராகவும், 8 மெகா பிக்சல் வைட் ஆங்கேல் மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கேல் கேமராவகவும் செயல்படுகிறது.

இதன் மற்றுமொரு கேமரவான 2 மெகா பிக்சல் டெப்த் கேமராவக செயல்படுகிறது. மேலும், இவற்றுடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்‌இ‌டி பிளாஷ் லைட்டும் மொபைலின் பின்புறத்திலே இணைக்கபட்டுள்ளது.

மேலும் இதில் மொபைலின் முன் பக்க (selfie camera) கேமராவில் ஒரே ஒரு கேமரா பொருத்தபட்டுள்ளது.

அந்த கேமராவின் அளவு 16 மெகா பிக்சல் பிரைமரி கேமராவாக கொடுக்கபட்டுள்ளது.

இவற்றுடன், டிஜிட்டல் ஜூமிங்க், ஃபேஸ் டெடெக்ட்சன், டச் டூ ஃபோகஸ் போன்ற சேவைகளும் தரப்பட்டுள்ளன.

Perfomance

இதில் கொடுக்கபட்டிருக்கும் சிப்செட் வகை குயல்கோம்ம் ஸ்நாப்ட்ராகன் 750ஜி. இதன் சிபியு மதிப்பு octa core(2.2ஜி‌எச்‌ஜெட் , dual core, kryo 570+1.8ஜி‌எச்‌ஜெட், hexa core, kryo 570) ஆகியவை இணைக்கபட்டுள்ளது.

இந்த மொபைலின் கிராபிக்ஸ் திறனுக்காக அட்ரெனோ 619 சேவை கொடுக்கபட்டுள்ளது. இது அட்ரெனோ 612 கிராபிக்ஸ் திறனை விட 60% சதவீதம் நல்ல கிராபிக்ஸ் திறனை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

Storage

மொபைலின் உள்ளடக்க ஸ்டோரேஜ் மூலம் நீங்கள் 64ஜி‌பி வரை டேட்டாவை சேமித்து கொள்ளலாம். மேலும் இதில் உங்களுக்கு அதிக அளவு ஸ்டோரேஜ் தேவைபட்டால் மெமரி கார்ட் ஆப்ஷனை பயனபடுத்தி 512ஜி‌பி வரை உபயோகித்து கொள்ளுமாறு வசதி செய்யபட்டுள்ளது.

Batttery

பேட்டரி திறனை பொறுத்தவரை 4500mah அளவை இந்த மாடல் மொபைல் பெற்றுயிருக்கிறது. இவை டைப் சி வகை கொண்ட யு‌எஸ்‌பி உடையது.

குயிக் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 70% சதவீதம் வரை மொபைலில் சார்ஜ் ஏறும் என சொல்லப்படுகிறது.

Network & Connectivity

இதில் உங்களால் ஒரே நேரத்தில் இரண்டு நானோ சிம்களை பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது. இது 5ஜி சேவையை அனுமதிக்கும் விதமாக உருவாக்கபட்டுள்ளது.

இந்த மொபைலின் டிஸ்ப்ளே பாதுகாப்பிற்க்கு கொரில்லா கிலாஸ் டைப் 5 வகையை பொருத்தபட்டுள்ளது.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !