Last Updated on September 18, 2024 by Dinesh
பிரபல பாடகர் கிருiஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மறைவு திரையுலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, அஸ்ஸாம், குஜ்ராத் உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்..
பாடகர் கேகே தமிழில் 12B, கண்டநாள் முதல், தாமிரபரணி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றி பாடல்களை தமிழில் பாடியுள்ளார்..
கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைபடத்திற்க்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்..
இப்படத்தில் இடம் பெற்ற ‘உயிரின் உயிரே’ பாடலை கிருஷ்ணகுமார் குன்னத் மற்றும் பாடகி கே.எஸ். சித்ரா ஆகியோர் இணைந்து பாடிய பாடல் மிகவும் பிரபலமானது..
இந்நிலையில் தற்போது பாடகர் கேகே-வின் திடீர் மறைவை கேட்டு அதிசிர்ச்சியடைந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகர் கேகே குறித்து உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்..
அந்த பதிவில், என் “உயிரின் உயிரே” மறைந்தது. பாடகர் கேகே அவருடைய கடைசி பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதிர்ச்சியான செய்தியை கேட்டு. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பதினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்..
பாடகர் கேகே-வின் மறைவிற்க்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடன் பாடகர் கேகே கடைசியாக பாடிய பாடலின் போது எடுத்து கொண்ட புகைபடத்தை பகிருந்து கடவுள் அவரது ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.