FeaturesTechnology

poco m3 pro 5g : பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட் போன்

poco m3 pro 5g: தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்து உள்ளது..

poco m3 pro 5g பட்ஜெட் விலையில் ஒரு சுமார்ட் போன்
poco m3 pro 5g

கடந்த ஜூன் 8 ஆம் தேதி 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய மொபைல் மாடல் விற்பனைக்கு வெளியிடபட்டது. இந்த மொபைல் மாடல் எல்லோராலும் வாங்க கூடிய பட்ஜெட் விலையில் வந்துள்ளது.

இதே போன்று கடந்த பிப்ரவரி மாதம் போக்கோ மொபைல் சீரிஸில் poco m3 என்ற புதிய மாடல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது poco m3 pro 5g சந்தைக்கு வந்துள்ளது.

poco m3 pro 5g Full Specification

5000mah பேட்டரி வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளியாகி இருக்க கூடிய இந்த மொபைல் மாடல் குறித்த சிறப்பு அம்சங்களை பற்றி இதில் தெளிவாக பார்ப்போம்.

poco m3 pro 5g price in india : ஆன்லைன் விற்பனையில் இந்த மொபைலின் விலை ரூ. 13,999 என குறிப்பிடபட்டுள்ளது. இதை நீங்கள் வாங்கும் சமயத்தில் விலையில் மாற்றம் இருக்கலாம்.

Display

இதன் டிஸ்ப்ளே அளவு பொறுத்தவரை 6.5inch கொடுக்கபட்டுள்ளது. இவை சென்டி மீட்டர் அளவில் 16.51cm பெற்றுயிருக்கிறது. மேலும் டிஸ்ப்ளே-வில் 405 PPI, IPS LCD பொருத்தபட்டுள்ளது.

மொபைலின் ரெஃப்ரெஷ் ரேட் 90எச்‌ஜெட் – இல் இயங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Camera

கேமராவை பொருத்தமட்டில் மற்ற செல்போன்களில் இருப்பதை போன்றே இதிலும் மூன்று விதமான கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளன. அவைகள்

மெயின் கேமராவக 48mp, பிரைமரி கேமராவக செயல்படுகிறது. இதில்கேமராவை உபயோகிக்கும் போது உங்களால் டிஜிட்டல் ஜூமிங்கில் 10x வரை அளவினை வைத்து கொள்ள முடியும்.

வைட் ஆங்கேல் பொறுத்தவரை 79° (degree) வரை உங்களுக்கு வியூவை கொடுக்கிறது.

இரண்டாவதாக 2mp,மேக்ரோ கேமராவக இயங்குகிறது. இதன் மற்றுமொரு கேமராவக 2mp, டெப்த் கேமராவகவும் செயல்படுகிறது.

மேலும், இதில் ஆட்டோ போக்கஸ், எல்‌இ‌டி பிளாஷ் போன்ற சேவைகளும் இதனுள் இணைக்கபட்டுள்ளன.

ஃப்ரண்ட் கேமராவை பொறுத்தவரை 8mp, வைட் ஆங்கேல் பிரைமரி கேமரா கொடுக்கபட்டுள்ளது.

Battery

டைப் சி வகையை கொண்ட சார்ஜ் இணைப்பை உடைய இந்த மொபைலின் பேட்டரி அளவு 5000mah- ஐ கொடுத்துள்ளனர்.

Storage

4ஜி‌பி ரேம் அளவை கொண்ட இந்த மொபைலின் உள்ளடக்க சேமிப்பு அளவில் இதில் 64ஜி‌பி வரை கொடுக்கபட்டுள்ளது.

இதில் மேலும் உங்களுக்கு சேமிப்பு அளவு அதிகம் தேவை என்றால் மெமரி கார்ட் ஆப்ஷன் மூலம் உங்களால் 1டி‌பி வரை சேமிப்பு அளவை அதிகரித்து கொள்ள முடியும்..

இதனில் கொடுக்கபட்டுள்ள மெமரி கார்ட் சேமிப்பு அளவு இதுவரை மற்ற மொபைகளில் இல்லாத அளவு இந்த மொபைலில் 1டி‌பி வரை கொடுக்கபட்டுள்ளது

Design

இந்த மாடல் மொபைல் உங்களுக்கு நீலம், கருமை, மஞ்சள் ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்க பெறுகிறது.

poco m3 pro – மொபைலின் உயரம் – 161.8mm, அகலம் – 75.3mm, தடிமன் – 8.9mm, கனம் – 190grams என்ற அளவில் ivai வடிவமைக்கபட்டுள்ளது.

Perfomance

இவற்றின் செயல்திறன் பொறுத்தவரை சிப்செட் மீடியா டெக்ஸ் டிமேன்சீட்டி 700 MT6833- ஐ பொருத்தபட்டுள்ளது.

Cpu செயல்பாடுகள் பொருத்தமட்டில் – octa core(2.2ஜி‌எச்‌ஜெட், quad core, cortex A76+2ஜி‌எச்‌ஜெட்,quad core, cortex A55) ஆகியவற்றில் இயங்குகிறது..

இது 64bit அம்சதிணை கொண்டது. இதனுள் இயங்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மெயில் -G57 MC2 -ஐ கொடுக்கபட்டுள்ளது..

மேலும் இந்த மொபைலில் இயங்கும் ரேம்- மின் டைப் LPDDR4X – என்ற வகையை சேர்ந்தது..

Network & Connectivity

இதனில் 5ஜி தொழில்நுட்பம் கொடுக்கபட்டு இருந்தாலும், இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்க்கு அனுமதி இல்லாததால். இதில் 4ஜி, 3ஜி, 2ஜி ஆகிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்..

இரண்டு நானோ சிம்களை உபயோகிக்கும் வண்ணம் இந்த மொபைலை தயாரித்து உள்ளனர்.

Sensor

ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதனுள் அனுமதிக்கபடுகிறது. ஃபிங்கர் பிரிண்டானது மொபைலின் பக்கவாட்டில் பொருத்தபட்டுள்ளது. இதனால் உங்களால் மொபைலை சுலபமாக லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ள முடியும்.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !