Vivo v23 5G, Vivo V23 இந்தியாவில் முதன் முறையாக நிறம் மாறும் புதிய மாடல் மொபைல் போன் விற்பனைக்கு வருகிறது அதனை பற்றி பின்வருமாறு…
விவோ நிறுவனம் தனது வி சீரிஸ் மொபைல் மாடல்களில் தற்போது புதியதாக இரண்டு மொபைல் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது. அவைகள் விவோ வி23 5g மற்றும் விவோ வி23 ப்ரோ 5g ஆகிய இரண்டு மொபைல்கள் விற்பனைக்கு சந்தைக்கு வர உள்ளது இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும் விவோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் இந்தியாவின் மிகவும் மெலிதான 3d வளைந்த டிஸ்ப்ளே உடன் மொபைலின் பக்கவாட்டில் மெட்டல் வடிவமைப்பை கொண்டதாக தயாரிக்கபட்டுள்ளது.
தற்போது வெளிவர இருக்கும் இந்த இரண்டு வகையான மாடல்களில் மட்டும் மொபைலின் பின்.பக்க பேனலில் வெயில்படும் பொழுது தானாகவே நிறம் மாறும் என தகவல் வெளியாகி உள்ளது.
டீசரில் காண்பித்தது போல விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஆகிய மாடல்கள் புளூ மற்றும் கோல்டன் கலர்களில் கண்வரும் வகையில் வடிவமைப்பை செய்துள்ளனர்.
Vivo v23 5G, Vivo V23 pro 5G
6.44 inch டிஸ்ப்ளே அளவை கொண்ட இந்த மாடலில் 440PPI, AMOLED உடன் மொபைல் பயன்பாட்டிற்க்கு டிஸ்ப்ளே அளவில் 90HZ ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கபட்டுள்ளது.
அண்ட்ராய்ட் 11 வெர்ஷனில் இயங்க கூடிய இந்த மொபலில் 64bit capacity உடன் 8ஜிபி ரம் கொண்டுள்ளது. மேலும் இது 128ஜிபி ஸ்டோரேஜ் திறனை உள்ளடிக்கியது .
இந்த மொபைலில் உங்களுக்கு கூடுதலாக அதிகம் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் இதில் உங்களால் மெமரி கார்ட் ஆப்ஷன் பயன்படுத்த முடியாது.
கேமராவை பொறுத்தவரை செல்போன் பின்புறம் மூன்று வித கேமராக்கள் கொடுக்கபட்டுள்ளது. அதில் பிரைமரி கேமரா 108 மெகா பிக்சல், வைட் அங்கேள் கேமரா 8மெகா பிக்சல், மேக்ரோ கேமரா 2 மெகா பிக்சல் என மொத்தம் மூன்று வடிவத்தில் கொடுக்கபட்டுள்ளது.
இதன் முன்பக்க கேமராவில் மொத்தம் 2இரண்டு கேமராக்கள் இணைக்கபட்டுள்ளது. அதில் பிரைமரி கேமரா 44மெகா பிக்சல், அல்ட்ரா வைட் அங்கேள் 8 மெகா பிக்சல் எனவும் கொடுக்கபட்டுள்ளது.
4200mah பேட்டரி திறனில் டைப் சி வகை கொண்ட சார்ஜர் அமைப்பில் இது 44w வரை பாஸ்ட் சார்ஜில் இயங்கும் என கூறப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பம் வரை உள்ளடக்கிய இந்த மொபைல் மாடல் விலை ரூ. 32,990 என இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
vivo v23 pro 5g price in india
விவோ வி23 ப்ரோ 5ஜி மாடலை பொறுத்தவரை முன்பக்க கேமராவில் பிரைமரி கேமரா 50 மெகா பிக்சல், அல்ட்ரா வைட் அங்கேள் கேமரா 8 மெகா பிக்சல் எனவும் மாற்றம் கொண்டுள்ளது.
மேலும் இதன் பேட்டரி திறன் 4300mah அளவை பெற்றுள்ளது. இந்த மொபைல் பெர்ஃபார்மன்ஸ் அளவில் octa core ( 3ஜிஎச்ஜெட், சிங்கிள் கோர், கோட்டெக்ஸ் A78 + 2.6ஜிஎச்ஜெட், த்ரி கோர், கோட்டெக்ஸ் A78 + 2ஜிஎச்ஜெட், குயத் கோர், கோட்டெக்ஸ் A55) என்ற செயல் திறன்களை கூடுலதாக பெற்றுள்ளது.
டிஸ்ப்ளே அளவில் 6.56inch அளவை பெற்ற இந்த மொபைல் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்க கூடியதாக உருவாக்கபட்டுள்ளது. இந்த மொபைல் மாடல் விலை ரூ. 34,999 என இருக்கும் எதிர்பார்க்கபடுகிறது.
இந்த புதிய மொபைல் மாடல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி விற்பனைக்கு வர இருப்பதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதில் குறிபிடபட்டிருக்கும் மொபைல் விலைகளானது நீங்கள் மொபைலை வாங்கும் பொழுது விலையில் மாற்றம் இருக்கலாம் என்பது குறிபிடத்தக்கது.