FeaturesTechnology

வாட்ஸ் அப் : இந்த மொபைல்களில் இல்லையா?

Last Updated on September 7, 2021 by Dinesh

வாட்ஸ் அப் : இந்த மொபைல்களில் எல்லாம் இனி செயல்படாது என தகவல் வெளியாகியுள்ளது…

வாட்ஸ் அப் : இந்த மொபைல்களில் இல்லையா?
whats app

உலகின் மிகவும் பிரபலமான குறுஞ் செய்தி செயலியான வாட்ஸ் அப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அந்த அப்டேட்டில் சில வகை மொபைல் மாடல்களில் இனி வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் செயலிகளை பயனபடுத்த முடியாத மொபைல் மாடல்கள் என்ன என்ன ? இவை எப்போதிலிருந்து பயன்படுத்த முடியாது போன்றவற்றை இவற்றில் காண்போம்..

செல்போன் உபியோகிக்கும் பெரும்பாலான பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலி சேவையை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்க்கு வாட்ஸ் அப் செயலி மொபைல் பயனாளர்களின் இன்றியமையாத தேவை என்று ஆகிவிட்டது.

ஏனெனில் வாட்ஸ் அப் செயலி மூலம் நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்ப நினைக்கும் குறிஞ் செய்தி, புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவை அவர் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவருக்கு வாட்ஸ் அப் மூலம் நாம் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.

இந்த செயலி உலகின் 180-க்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தபட்டு, சுமார் 60 மொழிகளில் பயன்பாட்டுக்கு உள்ளது.

மேலும் இந்த செயலி உலக அளவில் மாதந்தோரம் சுமார் 2 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை கொண்டுள்ளது.

ஆகையால், வாட்ஸ் அப் செயலியானது உலகின் மிகவும் பிரபலமான குறிஞ் செய்தி செயலியாக வலம் வருகிறது..

வாட்ஸ் அப் : இந்த மொபைல்களில் இல்லையா?

இந்த ஆண்டு துவக்க முதல் இருந்தே வாட்ஸ் அப் செயலியானது பல புதிய அப்டேட்களை அவ்வ போது வெளியிட்டு கொண்டு உள்ளது.

அப்படியாக சில மாதங்கள் முன்பு வாட்ஸ் அப் மூலம் பண பரிவர்தணை செய்து கொள்ளும் முறை அறிமுகபடுத்தபட்டது..

அதை போன்று தற்போது வெளியாகி உள்ள புதிய அப்டேட்டில் ஐபோன் 6எஸ் (iphone 6ச), சாம்சங் கேலக்ஸி எஸ் 2 ( samsung galaxy s2),

சோனி எக்ஸ்பீரியா மிரோ (sony xperia miro), லினோவா ஏ 820 (lenovo A 820) உள்ளிட்ட செல்போன்களில் நவம்பர் முதல் வாட்ஸ் அப் பயன் படுத்த முடியாது என்று அறிவித்துள்ளது..

அதன் படி, சமீபத்திய அப்டேட்டில் android 4.0.3 ice cream sandwich, ஐஓஎஸ் 9 (ios 9), கை ஓஎஸ் 2.5.0 (kaiOS 2.5.0) உள்ளிட்ட OS களில் வாட்ஸ் அப் சேவை இனி வழங்க பட மாட்டாது என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வகை அப்டேட் வாட்ஸ் அப்பில் வழக்கமாக நடக்கும் ஒரு புதிய அப்டேட் தான் இவை. புதிய மொபைல் மாடல்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்திற்க்கு ஏற்றவாறு

அந்நிறுவனம் செயலிகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் போது அவை பழைய மாடல் மொபைல்களுக்கு சப்போர்ட் அளிக்களிக்காமல் இருப்பது இயல்பான ஒன்று தான்.

இதை தொடர்ந்து மற்றும் ஒரு புதிய அப்டேட்டாக மணிஹெஸ்ட் 5 (money heist ) தொடரின் அல்வாரோ மார்டின் ஸ்டிக்கர் வெளியிடபட்டுள்ளது. இதை நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டிக்கர் பாக்ஸில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !