whatsapp update: இனி வாட்ஸ் அப்பில் உங்களால் இதை செய்ய முடியாது?
Last Updated on October 5, 2022 by Dinesh
whatspp update : தொடர்ந்து புது புது அப்டேட்களை வெளியிட்டு வரும் whatspp தற்போது சமீபத்தில் மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது..
ஃபேஸ் புக் நிறுவன தலைவர் மார்க் ஃஜிப்ராக் கடந்த 2022 ஜூன் மாதத்தில் ஃபேஸ் புக் நிறுவனத்தின் பெயரை meta என மாற்றியமைத்தார்.
இதற்க்கு முன் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்க கூடிய செயலிகளான instagram, whatsapp போன்ற சமூக வலைத்தள செயலிகளை வாங்கிய மார்க் ஃஜிப்ராக்..
facebook, instagram, whatspp உள்ளிட்ட பிரபலமான சமூக வலைத்தள செயலிகளை தான் புதியதாக உருவாக்கிய meta நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்து ஃபேஸ் புக் செயலியுடன் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாக்ரம் செயலிகளை ஃபேஸ் புக்குடன் இணைக்கும் வசதியை கொண்டு வந்தார்..
இதை தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து ஃபேஸ் புக், இன்ஸ்டாக்ரம், வாட்ஸ் ஆப் ஆகிய செயலிகளில் புதிய புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது மார்க் ஃஜிப்ராக்கின் மெட்டா நிறுவனம்..
அந்த வகையில், ஏற்கனவே வாட்ஸ் அப்பில் viewonce என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகபடுத்தி இருந்தது மெட்டா நிறுவனம்.
இந்த புதிய அம்சத்தில் வாட்ஸ் ஆப் பயனாளிகள் மற்றொருவருக்கு புகைபடங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அனுப்பும் போது அதனை பெரும் மற்றொமொரு பயனாளி நாம் அனுப்பிய புகைபடத்தையோ, வீடியோவையோ பார்த்த பிறகு வாட்ஸ் அப்பில் இருந்து மறைந்து விடும்.
இதில் பெருநரின் புகைப்படம் கேலரியில் சேமிக்கபடாது மேலும் அவர்களால் மற்ற ஆப்ஸ் மூலம் அவற்றை அனுப்ப முடியாது போன்ற அம்சங்கள் நிறைந்த அப்டேட்டை வெளியிட்டது மெட்டா..
தற்போது இந்த whatsapp onceview அப்டேட்டில் மேலும் ஒரு புதிய அம்சத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இனி view once முறையில் வரும் புகைபடங்கள், மற்றும் வீடியோக்களை,
பயனாளர்கள் screenshot அல்லது screen record போன்றவைகளை மேற்கொள்ள முடியாது என்ற புதிய அறிமுகத்தினை மெட்டா நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது..
அவ்வாறு sceenshot எடுக்க முயன்றாள் அந்த புகைப்படம் கருப்பாக மாறிவிடும் எனவும் இதற்க்கு பிற ஆப்களின் உதவியை பயன்படுத்தினாலும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது என அறிவித்துள்ளது..
ஆனால், பயனர்கள் இன்னொரு மொபைலை கொண்டு இதனை record அல்லது புகைப்படம் எடுத்தல் போன்றவற்றை பற்றி எந்த தகவலும் இல்லை.