அமைச்சகங்களுக்கு புதிய பெயர் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 234 இடங்களில் போட்டியிட்டு 159 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தது. மற்றொரு புறம் அதிமுக 75 தொகுதிகளை கைப்பற்றி தோல்வியுற்றது.
இதனை அடுத்து திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநரிடம் உரிமை கோரியது. அதனை ஏற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து இருந்தார்.
இதை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்த படி (இன்று மே 7ஆம்) தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தோற்று அதிகரித்து வரும் காரணத்தால் எந்தவித ஆரவாரமின்றி மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
அதில், தமிழகத்தின் 23வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். பின்னர் திமுக அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பதவி ஏற்று கொண்டனர்..
இதற்கிடையே நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அந்த அறிக்கையில் கூறிருந்ததாவது தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள் – துறைகளின் செயல்பாடுகள் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன.
மக்களின் எதிர்பார்ப்புகள்,சவால்கள், நிர்ணயிக்கபடும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்ப்வையோடு பெயர்களை
மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். மேலும் பெயர் மாற்றம் செய்யபட்ட துறைகளின் விவரத்தையும் அறிக்கையில் விவரித்துள்ளார் அவை கீழ்வருமாறு.
அமைச்சகங்களுக்கு புதிய பெயர் மாற்றம்
தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நீர்வள துறை என்று தனி அமைச்சகம் உருவாக்கபடுகிறது.
உழவர்களின் நலன்களையும் பேணி காப்பது அரசின் நோக்கம் என்பதால் வேளாண்மை துறை வேளாண்மை – உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்யபடுகிறது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் தொடர்பான ஆயுத்தங்கள் விழிப்புணர்வுக்காக சுற்றுசூழல் துறை – சுற்றுசூழல் காலநிலை மாற்ற துறை என மாற்றம் செய்யபடுகிறது.
பரந்தபட்ட நோக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை என பெயர் சூட்டபடுகிறது.
மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மீன்வளத்துறை – மீன்வளம் மீனவர் நலத்துறை என்ற பெயர் மாற்றபடுகிறது
தொழிலாளர் திறன்களையும் மேம்படுத்த வேண்டி தொழிலாளர் நலத்துறையானது – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டு துறை என மாற்றபடுகிறது.
செய்தி- மக்கள் தொடர்பு துறை செய்தி துறை‘யாக உருமாற்றம் அடைகிறது.
சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்கிற செயல்பாடுகளை உள்ளடக்கியதால் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை என்று வழங்கபட்டுள்ளது.
பணியாளர்கள் என்கிற பதம் மனிதவளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்பதால் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்ததுறை மனிதவள மேலாண்மை துறை என அழைக்கபடும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று பெயர் மாற்றம் அடைகிறது..
என இவ்வாறு துறைகளின் பெயர்களை மாற்றம் செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.. மேலும் அதில் இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.