LatestPolitics

அமைச்சரவை பட்டியலில் யார் யாருக்கு இடம்?முழு விவரம்

அமைச்சரவை பட்டியலில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்கபட்டிருக்கிறது என்பதனை இதில் பார்போம்…

அமைச்சரவை பட்டியலில் யார் யாருக்கு இடம்?முழு விவரம்
Dmk

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 159 தொகுதிகளில் வெற்றியை ஈட்டியது.

ஸ்டாலின் வெற்றி

இதில், திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க . ஸ்டாலின் சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டார். அதில், அவர் சுமார் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

கொளத்தூர் தொகுதியில் திரு மு. க ஸ்டாலின் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வென்று உள்ளார்.. மேலும் சென்னையில் திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அபார வெற்றியை பெற்று இருக்கிறது..

திமுக வெற்றி தொகுதி எண்ணிக்கை

இந்த வெற்றியை அடுத்து நேற்று ஆளுநரிடம் தமிழகத்தில் ஆட்சி அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கோரினார்.. மேலும் 133 பேர் கொண்ட தனது ஆதரவு கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்தார்..

நாளை மே 7ம் தேதி எளிதான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனிடையே இன்று தமிழக சட்ட பேரவையில் இடம் பெரும் அமைச்சர்கள் பட்டியியல் வெளியாகி உள்ளது.

புதிய அமைச்சர் பட்டியியல்

திரு மு.க. ஸ்டாலின் (முதலமைச்சர் )– பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்று திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் வகிக்கிறார்.

துரைமுருகன் (நீர்வள துறை ) – சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

கே. என். நேரு (நகர்புற வளர்ச்சி துறை) – நகராட்சி நிர்வாகம், நகர்புற குடிநீர் வழங்கல்

ஐ. பெரியசாமி (கூட்டுறவு துறை) – கூட்டுறவு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்

பொன்முடி (உயர்கல்வி துறை) – உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னனுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள்

எ.வ. வேலு (பொதுப்பணி துறை) – பொதுபணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்

எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்( வேளாண்மை – உழவர் நலத்துறை) – வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணி கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை கரும்பு தீர்வை, கரும்பு பயிர் மேம்பாடு மற்றும் தரசு நில மேம்பாடு

கே. கே. எஸ்‌.எஸ்.ஆர். ராமசந்திரன்(வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை) – தொழில்துறை தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டு துறை தொல்பொருள்

எல். ரகுபதி (சட்டத்துறை ) – சட்டம், நீதி மன்றங்கள், சிறைசாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்

க.முத்துசாமி(வீட்டுவசதி துறை ) – வீட்டுவசதி,ஊரகவீட்டுவசதி, நகரமைப்பு திட்டமிடல் மற்றும் வீட்டுவஸ்சதி மேம்பாடு, இடவசதி கட்டுபாடு,நகரதிட்டமிடல் நகற்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

கே.ஆர். பெரியகருப்பன்(ஊரக வளர்ச்சி துறை) – ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், ஊரக கடன்கள்

தா.மோ.அன்பரசன்(ஊரக தொழிற்துறை) – ஊரக தொழில்கள், குடிசை தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் குடிசை மாற்று வாரியம்

மு.பெ.சாமிநாதன்(செய்திதுறை) – செய்தி மற்றும் விளம்பரம், திரைபடதொழில் நுட்பவியல் மற்றும் திரைப்பட சட்டம், பத்திரிக்கை அச்சு காகித கட்டுபாடு எழுதுபொருள்

திருமதி கீதா ஜீவன்(சமுகநலன்-மகளிர் உரிமை துறை) – மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவு திட்டம்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை துறை) – மீனவளம் மற்றும் மீன் வளர்ச்சி கழகம் கால்நடை பராமரிப்பு

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்(போக்குவரத்து துறை) – நாட்டுடமையாக்கபட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

கா. ராமசந்திரன்(வனத்துறை) – வனம்

அமைச்சரவை பட்டியலில் யார் யாருக்கு இடம்?முழு விவரம்

அர. சக்கரபாணி (உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை)நுகர்வோர் பாதுகாப்பு, விலைகட்டுபாடு

வி. செந்தில்பாலாஜி(மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை) – மரபு சாரா எரிசக்தி,மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் கருபஞ்சாற்று கசண்டு

ஆர்.காந்தி(கைதறி மற்றும் துணிநூல் துறை) – கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்

மா. சுப்ரமணியன்(மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை) -மக்கள் நல்வாழ்வு, மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலன்

பி. மூர்த்தி(வணிகவரி மற்றும் பதிவுதுறை) -வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைகள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பனிகள் பதிவு

எஸ்.எஸ்.சிவசங்கர்(பிற்படுத்தபட்டோர் நலத்துறை) – பிற்படுத்தபட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தபட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

பி.கே.சேகர்பாபு(இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை) – இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

பழனிவேல் தியாகராஜன்(நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை) – நிதி துறை,சட்டம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வுதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்

சா.மு. நாசர்(பால்வள துறை) -பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

செஞ்சி. கே.எஸ்.மஸ்தான்(சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை) –

அன்பில் மகேஷ் பொய்யாமொழி(பள்ளி கல்வி துறை) – பள்ளி கல்வி

சிவ. வீ. மெய்யநாதன்(சுற்று சூழல்- காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை) – மாசு கட்டுபாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை

சி.வி கணேசன்(தொழிலாளர் நலன் -திறன் மேம்பாட்டு துறை) – மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணகெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு

தா.மனோதங்கராஜ்(தகவல் தொழில்நுட்ப துறை) – தகவல் தொழில்நுட்பம்

மா.மதிவேந்தன்(சுற்றுலா துறை) – சுற்றுலா வளர்ச்சி கழகம்

என். கயல்விழி செல்வராஜ்(ஆதிதிராவிடர் நலத்துறை) – ஆதிதிராவிடர் நலன்,மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்

என 33 அமைச்சர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவி ஏற்கின்றனர்.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !