LatestPolitics

எளிதாக நடைபெறும் பதவி ஏற்பு – திமுக தலைவர் ஸ்டாலின்

எளிதாக நடைபெறும் பதவி ஏற்பு தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை…

எளிதாக நடைபெறும் பதவி ஏற்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
mk stalin

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்று திமுக தலைமையில் ஆட்சியை கைபற்றியுள்ளது. அதையடுத்து நாளை மே 7 திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எளிய விழாவினை வீட்டிலிருந்தே கண்டு களியுங்கள் என அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

கொரோனா பரவல் அதிக அளவு பரவி வருவதால் இதே போன்று மே 2 தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டாம் வீதிகள் வெறிச்சோடட்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து நேற்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார்.

அப்போது திமுக தலைமையில் வெற்றி பெற்ற 133 எம்‌எல்‌ஏகளின் ஆதரவு கடிதத்தையும் உடன் திமுகவின் அமைச்சர் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார்.

இதனை அடுத்து முதன் முறையாக மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மே 7 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் பதவி ஏற்க உள்ளனர். இதில் 34 பேர் கொண்ட அமைச்சர்கள் மற்றும் எம்‌எல்‌ஏகள் பதவி ஏற்க போகிறார்கள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நாளை நடைபெறும் பதவி ஏற்பு விழா எளிதான முறையில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து நாளை சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் மிக எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. .இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு உடன் பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும் உங்கள் முன்னாள் பதவி ஏற்க முடியவில்லையே என தனது கவலையை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எளிய விழாவினை வீட்டில் இருந்தே கண்டு களியுங்கள் உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னியில் தான் என்பதனை அறிவேன் என்பதனை அறிவித்துள்ளார்.

அறிக்கையின் முழு விவரம்:

எளிதாக நடைபெறும் பதவி ஏற்பு:

திமுக மீது நம்பிக்கை வைத்து மகத்தான தீர்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். திமுக ஆறாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

சட்டமன்ற தலைவராக எனது பெயரை அண்ணன் துரைமுருகன் முன்மொழிய, அருமை சகோதரர் கே.என். நேரு வழி மொழிந்தார்.

மே 7 ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது.

உடன் பிறப்புகள் அயராத உழைப்பினால் கிடைத்தது இந்த வெற்றி.

இரத்தமும், வியர்வையும் சிந்தி கழகத்துக்காக உழைத்த உடன் பிறப்புகளை அழைத்து அவர்களுக்கு முன்னாள் பதவி ஏற்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

கொரோனா என்ற பெருந்தொற்றின் காரணமாக நடத்த முடியவில்லை

உடன் பிறப்புகள் உடலால் அவரவர் வீட்டில் இருந்தாலும் உள்ளதால் சென்னையிலே தான் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

உங்களது உழைப்பு கழக ஆட்சியை மலர வைத்தது, உங்களது வாழ்த்து எங்களை பெருமைப்படுத்தும்,அனைவரும் ஒன்று சேர்ந்து சம உரிமையும், கடமையும் உடைய தமிழகத்தை உருவாக்கிடுவோம்! என்ற அறிக்கையை வெளியூட்டுள்ளார்.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !