Last Updated on May 24, 2021 by Dinesh
புதிய ஆட்சி அமைக்க உரிமை இன்று தமிழக ஆளுநரிடம் உரிமை கோரினார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்…

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி 2021கான சட்ட மன்ற தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் மே 2 ஆம் தேதியில் வெளியானது. அதில் அதிக பெரும்பான்மையுடன் தி.மு.க மற்றும் அதன் .கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியில் திராவிட முன்னேற்ற கழகம் 125 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் தி.மு.க சின்னமான உதய சூரியனில் நின்று வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகள் 8 இடங்களில் வென்றதன் மூலம் திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 133 இடங்களை கைபற்றியுள்ளது.
இதில் தி.மு.கவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டி போட்டு 4 இடங்களை கைபற்றியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிட்ட 6 இடங்களிலும் தனி சின்னமான பாணை சின்னத்தில் நின்று 4 இடங்களை வெற்றி பெற்றதையடுத்து.
நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மொத்தம் தமிழகத்தில்159 இடங்களை கைபற்றியது.
இதனை தொடர்ந்து தி.மு.க சட்ட பேரவை கூட்ட தொடர் கடந்த மே 4 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் திமுகவில் வெற்றி பெற்ற 125 பேர் மற்றும் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 8 ஆகிய பேர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் முறைப்படி திமுக. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு தமிழக சட்ட பேரவை தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யபட்டார்..
புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார் – மு. க. ஸ்டாலின்
இதனை அடுத்து இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் திமுகவில் வெற்றி வெற்றி 125 எம்எல்ஏகள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 8 எம்எல்ஏகள் என மொத்தம் 133 எம்எல்ஏகளின் ஆதரவு கடிதத்தையும்
அதனுடன் திமுக தலைமையிலான புதிய அமைச்சர் பட்டியலையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார்.
அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுடன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பொது செயலாளர் திரு. துரைமுருகன், பொருளாளர் திரு டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு ஆகியோர் உடன் இருந்தனர்..
இன்று மாலைக்குள் பதவி ஏற்க்கும் நேரம் உள்ளிட்டவற்றைகளை குறித்து ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹுத் முடிவெடுப்பார் என தெரிகிறது.
வரும் மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றி எளிமையான முறையில் நடைபெறும்
என ஏற்கனவே தெரிவிக்கபட்ட நிலையில் இன்று திமுக. தலைவர் மு.க. ஸ்டாலின் நடைபெற்ற 2021- கிற்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று.
.தமிழகத்தின் 23வது முத்லமைச்சராக பொறுப்பேற்று புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் – திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
இந்த வெற்றியின் மூலம் திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிபிடத்தக்கது.