முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது…

முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரபூர்வமாக வெளியானது…

முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது
Admk

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 தேதி அறிவிக்கபட்ட தினத்திலிருந்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்களும் அறிவிப்புகளும் தினந்தோரம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்ற பதவி காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் 2021 தேர்தல் தேதி அறிவிப்பை ஏற்கனவே தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி 2021 கிற்கான அறிவிப்பு தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். அந்த அறிவிப்பானது.

ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் எனவும், அதன் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் என 2021 தேர்தல் தேதி அறிவிப்பை அவர் அறிவித்திருந்தார்..

நடைபெற இருக்கும் தமிழகத்தின் 2021- க்கான சட்டமன்ற தேர்தல் முன்னாள் முதல்வர். ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என இரண்டு மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது..

ஆகையால், இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி வாய்ப்பை பெற போகிறது என்பதில் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

ஏனென்றால் இந்த தேர்தலில் திமுக, அதிமுக மட்டுமின்றி சீமானின் நாம் தமிழர் கட்சி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்,

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போட்டி போடவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது…

இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் படி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து நடத்தபட்டு வந்த பேச்சு வார்த்தை நிறைவடைந்து.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக தலைமை.

மேலும், கூட்டணி கட்சிகளான தேமுதிக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது அதிமுக தலைமை..

இந்த நிலையில் தற்போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முதல் கட்ட தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி மன்ற கழக பரிசீலனை அடிபடையில் எடுத்த முடிவின் படி.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்ட பேரவை பொது தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிகார்பூர்வமாக அறிவித்தது. அதற்கான பட்டியல் கீழ்கண்டவாரு.

தேனி மாவட்டம் (போடி நாயக்கனூரில்) – ஓ. பன்னீர் செல்வம், சேலம் புறநகர் மாவட்டம் (எடப்பாடி) – எடப்பாடி கே. பழனி சாமி, வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்(ராயபுரம்) – டி. ஜெயகுமார்,

விழுப்புரம் மாவட்டம் (விழுப்புரம்) – சி.வி. சண்முகம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்(ஸ்ரீ வைகுண்டம்) – எஸ். பி. சண்முகநாதன், \

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்(நிலக்கோட்டை) – எஸ். தேன்மொழி ஆகியோர் அடங்கிய பட்டியல் வெளியானது.

முதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கழக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் எடப்பாடி கே. பழனி சாமி ஆகியோர் இணைந்து அறிவிப்பை வெளியிட்டனர்.

Exit mobile version