LatestPolitics

மு.க. ஸ்டாலின் முதல்வரானதும் போட்ட 5 கையெளுத்துகள்

மு.க. ஸ்டாலின் முதல்வரானதும் போட்ட 5 முக்கிய கோப்பைகளில் போட்ட கையெளுத்துக்கள்..

மு.க. ஸ்டாலின் முதல்வரானதும் போட்ட 5 கையெளுத்துகள்
mk stalin

இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் 23வது முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார். பின்னர் 33 திமுக அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்க்கு சென்று ஆசி பெற்று கலைஞ்ரின் புகைபடத்திற்க்கு மலர் தூவி மரியாதை செய்தார்..

பின்னர், கோபாலபுரத்திலிருந்து நேராக மெரினா கடற்கரைக்குயிலுள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞ்ரின் நினைவிடத்திற்க்கு சென்று மரியாதை செய்தார்.

அப்போது அவருடன் பதவி ஏற்று கொண்ட அமைச்சர்களும் உடன் இருந்தனர். பின் அவர்களும் அண்ணா மற்றும் கலைஞ்ரின் நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். இதுவரை தலைமை செயலகத்திற்குள் துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என

சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த திரு மு. க.ஸ்டாலின் அவர்கள் தற்போது மக்கள் கொடுத்த பேராதரவுடன் முதன் முறையாக தமிழக முதலமைச்சராக தலைமை செயலகத்திற்க்குள் அடியெடுத்து வைத்துள்ளார்..

தலைமை செயலகத்தில் தனது அறைக்கு சென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்த உடன் அவர் முதலில் 5 முக்கிய கோப்புகளில் கையெளுத்திட்டுள்ளார். அந்த 5 முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:

கடந்தாண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்தே மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியானது. கொரோனா முதல் அலை வீசிய பொழுது அதனை

கட்டுபடுத்த மத்திய,மாநில அரசுகள் வேறு வழியின்றி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது இதனால் நடுதர, ஏழை எழிய மக்கள் கடுமையாக பாதிக்கபட்டனர்.

பின்னர் கொரோனா பரவல் வேகம் குறைந்து சற்று பழைய நிலைக்கு திரும்ப மாறி கொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வீச தொடங்கியது.

இதனால், தமிழகத்தில் இரவு 10.00மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தியும் கொரோனா பரவல் அதிகரிப்பது

குறையாத காரணத்தால் தற்போது புதிய கட்டுபாடுகள் விதித்து நண்பகல் 12.00 மணிக்கு மேல் கடைகளை திறக்க அனுமதி இல்லை என அறிவித்தது.

50 சதவீதம் பணியாட்களுக்கு மட்டுமே பணி செய்ய அனுமதி அளித்துள்ளதால். இதனால் தின கூலிகள்,நடுத்தர மக்கள் மிக கடுமகையாக பாதிக்கபடுகின்றனர்.

அவர்களுக்கு இச்சமயத்தில் கைகொடுக்கும் விதமாக தற்போது முதல்வராக பதவி ஏர்திற்கும் மு.க. ஸ்டாலின் தந்து தேர்தல் வாக்குறுதிகளில் கொரோனா நிவாரணம் 4,000 வழங்கபடும் என தெரிவித்து இருந்தார்..

மு.க. ஸ்டாலின் முதல்வரானதும் போட்ட 5 கையெளுத்துகள்

1.அதன்படி,இன்று பதவி ஏர்த்ததும் முதல் கையெளுத்தாக இம்மாதமே ரூ.2,000 முதல் தவனையாக வழங்கபடும் என அறிவித்தார். அதில் சுமார் 2,07,67,000 ரேஷன் அட்டைதார்களுக்கு 4,15.39 கோடியில் முதல் தவணை 2000 வழங்க ஆணையத்தில் கையெளுத்திட்டார்.

2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெரும் மருத்துவ கட்டணத்தை தமிழக அரசு தந்து காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலுத்துவதற்கான ஆணையத்தில் கையெப்பம் இட்டார்.

3.மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலையை குறைக்க கையெலுத்தானது. அதில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைகிறது.

4. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு நகர பேருந்தில் கட்டணமில்லா பயணம் என்பது. அதை நிறைவேற்றும் விதமாக தற்போது அதற்கு கையெலுத்தாகி விட்டது.

5. தேர்தல் வாக்குறுதியான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தினை உருவாக்கி ஐ‌ஏ‌எஸ் அதிகாரி நியமனம் செய்து மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஆணையத்தில் கையெலுத்து போடபட்டது.

Show More
Back to top button
Close

Adblock Detected

Please Consider supporting us by disabling your adblocking Thank you !