Last Updated on June 30, 2021 by Dinesh
2021அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

2021 சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது அதற்கான பணிகளை தமிழக கட்சிகள் தொடங்கிவிட்டன.
2021அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு…
மேலும் திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் ,நாம் தமிழர் மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் தேர்தலுக்கு ஆயுத்தமாயி வருகின்றன.
முதல்வர் வேட்பாளர் யார்
அதன்படி ஆளும் கட்சியான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து வந்தது..
இதை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் அதிமுக கட்சியின் மீது எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக.
அதிமுக ஆலோசனை கூட்டம்
அதிமுக சார்பில் செயற்குழு கூட்டத்தை கூட்ட அதிமுக முடிவு செய்தது அதன்படி நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கபடும் என செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்..
முதல்வர் தேர்வு முடிவு
அதன் பிறகு, அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் பலர் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவருடனும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுப்பட்டு வந்தனர்
இருப்பினும் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டபடாத நிலையில் அதிமுகவின் தொண்டர்களுக்குள் சலசலுப்பு இருந்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் நேற்று இரவு முழுவதும்
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வதுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்பு ஒரு மனதாக முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யபட்டது…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஏற்கனவே முதல்வர் தேதி குறித்த அறிவிப்பு இன்று(அக்டோபர் 7)ஆம் தேதி அறிவிபத்தாக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் இன்று முதல்வர் அறிவிப்பை அறிவிப்பதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிமுக அலுவலகதுக்கு வந்தனர். பின்னர் காலை 10-மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் 11-பேர் கொண்ட வழி காட்டுதல் குழு பட்டியலை வெளியிட்டார் அந்த வழி காட்டு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள்:
வழிகாட்டுதல் குழு
திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி,ஜெயகுமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜேசிடி. பிரபாகர் -முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், பா.மோகன்- முன்னாள் அமைச்சர், ரா கோபால் கிருஷ்ணன் -முன்னாள் எம்.பி, கி. மாணிக்கம் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம் வரும் 2021-ஆம் சட்ட மன்ற தேர்ததில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிறுத்தபடுவார் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை கேட்டவுடன் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.