dmk : திமுக வேட்பாளர் பட்டியல் யார் யாருக்கு எந்தெந்த தொகுதி இதோ முழு விவரம் !

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

dmk : திமுக வேட்பாளர் முதற்கட்ட பட்டியல் இன்று அதிகாரபூர்வமாக திமுக தலைவரும், தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்..

dmk

வருகின்ற 2024 நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது..

இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் ( 19.04.2024) தேர்தல் நடத்தபடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,

தமிழக கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்தைகள் விரு விருவென நடைபெற்று வந்தது..

இன்றுடன் ஒரு வழியாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தங்களின் கட்சியில் கூட்டணி அமைத்து கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலை மும்முனை போட்டியாக சந்திக்க போகிறது தமிழக அரசியல் களம்..

தற்போது நடைபெற உள்ள 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ( 20.03.2024 ) முதற்கட்டமாக தொடங்கிய நிலையில்,

ஏற்கனவே முதலாவதாக கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டையும் உறுதி செய்திருந்த திமுக.

இப்போது திமுக தரப்பில் போட்டியிட உள்ள 21 பேரின் வேட்பாளர் பட்டியலை முதலாவதாக வெளியிட்டுள்ளது திராவிட முன்னேற்ற கழகம் ( ஏற்கனவே திமுக தரப்பில் தேர்தலில் நிர்ப்பதற்கான விருப்பமனுவையும், அவர்களிடம் நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ).

இந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் 39 தொகுதிகள், புதுவை 1, தொகுதி என மொத்தம் 40 தொகுதிகள் போட்டியிடுகின்றன.

இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக தனித்து 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன..

தற்போது, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் போட்டியாளர்கள் 21 பேரின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது..

வேட்பாளர்கள் பட்டியல்

வட சென்னை – கலாநிதி வீராசாமி, தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதி, ஸ்ரீபெரும்பதூர் – டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் ( தனி ) – க. செல்வம், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், வேலூர் – கதிர் ஆனந்த், தர்மபுரி – ஆ. மணி, திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை, ஆரணி – எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி – கே. மலையரசன், சேலம் – செல்வ கணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி (தனி ) – ஆ. ராசா, கோவை – கணபதி ப. ராஜ்குமார், பொள்ளாச்சி – கே. ஈஸ்வரசாமி, பெரம்பலூர் – அருண் நேரு, தஞ்சாவூர் – ச. முரசொலி, தேனி – தங்க தமிழ்செல்வன், தூத்துக்குடி – கனிமொழி, தென்காசி – ராணி ஸ்ரீகுமார்.

பின்வரும், பட்டியலில் புதியதாக 11 பேர்கள், பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், வழக்கறிஞர்கள் 2 பேர், மருத்துவர்கள் 6 பேர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்..

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை :

வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கபட்டதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பேசுகையில் ஒன்றியம், நகரம் அளவிலான பட்டியலை எடுக்க போகிறேன்..

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்திற்க்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்..

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும் தாண்டி கட்சியின் நலன் தான் முக்கியம், தமிழகத்தின் நலன் முக்கியம் என்று கருதி வெற்றியை நோக்கி வேலை செய்ய வேண்டும்.

அனைவரது தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் உங்கள் அனைவரிடத்தில் இருக்க வேண்டும் என ஸ்டாலின் பேசியுள்ளார்.

Exit mobile version