சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்

சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்
MK Stalin

இன்று நடைபெற்ற சட்ட சபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பலியான சமூகநீதி போராளிகளுக்கு ரூ. 4 கோடி செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட மன்றத்தில் கூறியதாவது: சமூகநீதியின் தாய்மொழியாக விளங்க கூடியது நம்முடைய தமிழகம்.

வகுப்புரிமை, வகுப்பு வாரிய உரிமை, இடஒதுக்கீடு, சாதி வாரியான ஒதுக்கீடு என்று எந்த பேரை சொன்னாலும் அது சமூகநீதி என்ற ஒற்றை சொல்லை கொடுக்கும் பொருளை வேற எந்த சொல்லும் தருவது கிடையாது.

அத்தகைய சமூகநீதி கொள்கை தான் திராவிட இயக்கம், இந்த தமிழ் சமுதாயத்திற்காக கொடுத்த மாபெரும் கொடையாகும் அது.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியதுக்கே அந்த தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது.

வகுப்பு உரிமை எனும் இடஒதுக்கீட்டு முறையே நூறு ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு கொண்டு வந்தது நீதி கட்சி தான். மூடப்பட்டு கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகார பதவிகள் அனைத்தும் அதன் மூலமாக அனைவருக்கும் ஆக்கியது.

சுதந்திர இந்தியாவில் அதற்கென சட்ட ரீதியான இடர்பாடுகள் வந்த போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவும் ரெட்டை குழல் துப்பாக்கியாய் இருந்து முன்னெடுத்த போராட்டம் தான் அது.

இந்திய துணை கண்டத்தையே அது கவனிக்க வைத்தது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அதனை அன்றைய பிரதமராக இருந்த

ஜவஹர்லால் நேரு அவர்களிடத்தில் வலியுறுத்தியதன் காரணமாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யபட்டது.

தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கைக்கு இந்திய அரசின் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அப்படி சமூகநீதி அடைய பல்வேறு போராட்டங்கள் நடத்திய இயக்கம் தான் திராவிட இயக்கம்.

பிற்படுத்தபட்டோர் , பட்டியலினதோர், பழங்குடியினர் ஆகியோருக்கென இடஒதுக்கீட்டை உறுத்திபடுத்தியதும்

காலத்தின் தேவைக்கு ஏற்ப அளவு மாற்றம் பெற்று தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருக்க கூடிய அந்த செரித்திரு சான்ற மறைக்க முடியாத சான்றாக அமைந்து இருக்கிறது.

இடஒதுக்கீடு போராட்டம்

சமூகநீதிக்கு என தொடர்ச்சியான போராட்டங்கள் வரிசையில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 சதவீத தனி இடஒதுக்கீடு கூறி வடக்க மாவட்டங்களில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த போராட்டத்தில் அன்றைய அரசின் காவல் துறையின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் 21 சமூகநீதி போராளிகள் அவர்கள் உயிர் தியாகம்திற்காகவும், போராட்டதிற்காகவும் நியாயம் வழங்கிடும் வகையில்

1989 ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு இந்தியாவிலே முதன் முறையாக மிகவும் பிற்படுத்தபட்ட என்ற பிரிவை அமைத்து கொடுத்து அவர்களுக்கென 20 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்கி, கல்வி, வேலைவாய்ப்பு, என சம அந்தஸ்தை பெற்று கொடுத்தார்.

அது அவர்கள் முன்னேற்ற பாதையை வகுத்து தந்தது. சமூகநீதி கொள்கையின் தொடர்ச்சியாக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் வழியில் செயல்பட கூடிய நம்முடைய அரசு மிகவும்

பிற்படுத்தபட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்திற்கென 10.5 சதவீதம் ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நடைமுறை வைத்து இருக்கிறது.

ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும் அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கபட வேண்டும் என்பதே திராவிட கழகத்தின் உயர்ந்த நோக்கம்.

அத்தகயை தியாகிகளின் பங்களிப்பை நினைவு கூர்ந்து 1987 ஆம் ஆண்டு

சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்

இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்க்கு பலியான 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தினை மதித்திட கூடிய வகையில்

ரூ. 4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கபடும் என தெரிவித்து கொள்கிறேன்.

விக்ரவாண்டி இடை தேர்தல் போது நான் அளித்த வாக்குறுதி இது யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை, யாரையும் மறக்க மாட்டோம்.

நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவன், மிகவும் பின்தங்கிய பட்டியலில் என் வகுப்பிற்க்கு ஒரு இடம் உண்டு நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டிருப்பதால் பின் தங்கிய வகுப்பினரின் நலனுக்காக என் உயிரையும் பணயமாக வைத்து போராடுவேன்.

என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் சொன்ன வாசகம் இது.

அந்த உறுதி மொழியை நானும் ஏற்று கொண்டதன் அடையாளம் தான் இந்த அறிவிப்பு என தெரிவித்து கொள்கிறேன் என முதல்வன் ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறினார்.

Exit mobile version