Last Updated on June 30, 2021 by Dinesh
எலுமிச்சை பலத்தில் இவ்வளவு நன்மைகளா? என நம்மை ஆச்சரியம் கொள்ளும் அளவுக்கு உள்ளது அதன் சிறப்பம்சங்கள்..
நாம் அன்றாட உட்கொள்ளும் உணவுகளின் பட்டியலில் எலுமிச்சை பழமும் ஒன்று இதில் ‘வைட்டமீன் சி’ நிறைந்த ஊட்டசத்து அதிக அளவில் உள்ளதால் நம் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் தருகின்றது.
எலுமிச்சை பழத்தை நோய்களுக்கான மருந்தாகவும்,அழகு சார்ந்த பொருட்களுக்கும், உண்ணும் உணவிற்கும் பயன்படுத்துகின்றனர்.
எலுமிச்சை பழத்தின் உபயோகங்கள் (lemon using products)
எழுமிச்சையை பயன்படுத்தி சோப்பு, எண்ணெய், ஃபர்னஷ் கிரீம் போன்ற நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கவும் எலுமிச்சை பழம் பயன்படுகின்றது.
மேலும் நாம் உண்ணும் பொருளாக ஊருகாய்(lemon pickle), மிட்டாய், தேநீர்(lemon tea) மற்றும் பழசாறு போன்றவை நமக்கு பயனுள்ளதாக உள்ளது.
எல்லா சீசனிலும் அனைவருக்கும் எளிதில் கிடைக்க கூடிய பழமாக எலுமிச்சை பழம் உள்ளது
எலுமிச்சை பலத்தின் பயன்கள் (lemon benefits)
எழுமிச்சையில் வைட்டமீன் சி சத்து அதிக அளவு இருப்பதனால் உடலின் தோல் மற்றும் தோல் சார்ந்த நோய்களில் இருந்து காத்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எலுமிச்சை பழத்தை உண்ணுவாதல் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் நம் உடலில் ஜீரண கோளாறு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை எலுமிச்சை பழசாரு அருகுவதன் மூலம் சட்டென தீர்வு கிடைக்கிறது.
எலுமிச்சை பலத்தில் இவ்வளவு நன்மைகளா?
எலுமிச்சை பலத்தில் இவ்வளவு நன்மைகளா? தினமும் எலுமிச்சை கலந்த தேநீர் பருகி வருவதன் மூலம் சருமம் மென்மையாகவும் பளபளப்புடன் இருக்க உதவுகிறது. தினம் ஒரு பழசாறு அருந்துவதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் சென்றடைவதை தடுக்கிறது மற்றும் நுரையீரல் தொற்றுக்களை குறைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இரத்த அழுத்ததை குறைக்க, உடல் எடையை குறைக்க, வயிற்று வலி பிரச்சனைகளை தீர்க்கவும், தொப்பை போன்ற பிரச்சனைகளுக்கு எழுமிச்சை தீர்வாகவும் உள்ளது. பற்களுக்கு வலுவாகவும், வாய் கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் கிருமி நாசினியாகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் எலுமிச்சை பலசாறு(lemon juice) குடிப்பதன் மூலம் தொண்டை வலி, தொண்டை புண், வாய் புண் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருப்பதனால் நம் உடலில் நெஞ்சு எரிச்சல், உப்பசம், உடல் சோர்வு, மலசிக்கல் போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு இந்த எழுமிச்சை பலசாறு தீர்வாகிறது..
சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்து இருப்பதால் பித்தம், மஞ்சள் காமாலை, இரத்த போக்கு போன்றவற்றுக்கு உகந்ததாக உள்ளது.
மேலும் அதிக வெப்ப காலங்களில் இந்த பழசாறை(lemon juice) பருகினால் உடல் வெப்பத்தை தனித்து உடலை குழுர்ச்சியாக வைத்து கொள்கிறது. .
எலுமிச்சை பழத்தில் மட்டும் நமக்கு பயன்கள் தருவதில்லை அதன் தோலில் கூட நம் உடலுக்கு தேவையான நார் சத்து அதிகளவில் உள்ளதால் உடலின் பல்வேறு பிரச்சனைகள் வராமல் மற்றும் தீர்க்கவும் பயன் தருகிறது.